வயது ஒரு தடையல்ல – 1

Vayathu Oru Thatai illai tamil kamakathai

 

கை விண்ணென்று வலித்தது!

அடித்த எனக்கே இப்படி இருக்கிறது. அடி வாங்கியவளுக்கு எப்படி இருக்கும்?

ஆனால், அவளோ எந்தச் சலனமும் இல்லாமல் உட்கார்ந்திருந்தாள். செய்த செயலின் வீரியம், எனது அடி, இத்தனையும் தாண்டி, ஒரு துளி கண்ணீர் கூட இல்லாமல் கீழே, வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏய், சொல்லித் தொலை, ஏன் இப்பிடி இருக்க?

பெண்கள் என்றாலே சுத்தமாகப் பிடிக்காது என்ற நிலையில் இருந்த நான், கொஞ்சமேனும் மரியாதையாகப் பார்க்கிறேன் என்றால், அதற்குக் காரணமே இவளும், இவ ஃபிரண்டும்தானே? அப்படிப்பட்டவள், இந்தக் காரியம் செய்யத் துணிந்ததில், கடுங்கோபம் எனக்கு!

என் வார்த்தைகளின் கடினம் அவளை பாதித்தது. என்னை நிமிர்ந்து பார்த்தாள்! வெறித்துப் பார்த்தாள்!

நீ, உன் ரூமுக்கு போ.

எதுக்கு? நீ மறுபடி சாவறதுக்கா?

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள், இப்பொழுது பொங்கினாள்.

நான் வாழுறேன், இல்ல சாவுறேன், உனக்கென்னடா வந்தது? உன் வேலையை மட்டும் பாரு!

இப்பொழுது எனக்கு கோபம் வந்தது. ஏதோ போனாப் போகுதுன்னு வந்தா, ஓவரா பேசுறா?!

நீ, எக்கேடோ கெட்டுப் போ! ஆனா, என் வீட்டுல வந்து, நீ சூசைட் பண்ணா, அது எனக்குதான் தலைவலி. சாவுறவ, ஏன் எனக்கு தலைவலியைக் கொடுக்குற? கோபத்தில் இன்னும் வார்த்தைகள் தடித்தன. சொன்ன பின்தான் என் முட்டாள்தனத்தை உணர்ந்தேன்.

ச்சே! இவ தற்கொலை வரைக்கும் போயிருக்கான்னா, எவ்ளோ மனக் கஷ்டத்துல இருந்திருக்கனும்? இவளோட கஷ்டத்தை போக்கலைன்னாலும், இன்னும் கஷ்டப்படுத்தாமனாச்சும் இருக்கனும், அதை விட்டுட்டு நானும் இப்படி பேசுனா, பாவம் என்ன பண்ணுவா?

அவள் அடிபட்டாற போல் என்னைப் பார்த்தாள். என்னையே பார்த்தவள், அழுத்தமாகச் சொன்னாள்.

ஓ, இது உன் வீடுல்ல? சாரி, எனக்கு தோணலை! மன்னிச்சிடு!

நீ தப்பா நினைக்காட்டி, இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நான் இங்க தங்கிக்கிறேன். நாளைக்கு காலையில கிளம்பிடுறேன். நீ இப்ப கிளம்பலாம். பயப்படாத, இனி உன் வீட்ல நான் தற்கொலை பண்ணிக்க மாட்டேன். ஏன்னா, என்னால, யாருக்கும் எந்த தொந்தரவும் வர்றது எனக்குப் புடிக்காது!

ராட்சசி, நான் ஒரு அடி அடித்தால், இவள் திருப்பி பல மடங்கு கொடுக்கிறாள்.

நீ கிளம்பு! நான் பாத்துக்குறேன்.

சாரி!

இட்ஸ் ஓகே! எனக்குன்னு யாராச்சும் இருப்பாங்கன்னு, நானும் ஒரு கனவுலியே வாழ்ந்துட்டேன். அது, என் தப்புதான். சரி நீ போ! நான் பாத்துக்குறேன்!

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்பவும், அவளிடம் அந்த கம்பீரம் இருக்கிறது. சுயமாக, உழைத்து மேலே வந்தவர்களிடம் மட்டுமே அந்த கம்பீரம் இருக்கும். இந்த கம்பீரம், நேர்மையின் சின்னம்.

என்னைப் போலத்தானே இவளும்! சொல்லப் போனால், என்னை விட இவளுக்குதான் சிரமங்கள் அதிகமிருந்திருக்கும். அப்போது கூட, அதையெல்லாம் எளிதில் வெளிகாட்டிக் கொள்ளாமல், நன்கு படித்து, தன்னை முன்னேற்றிக் கொண்டவள்தானே?

இன்று ஏன் இப்படி பேசுகிறாள்? அதுவும் யாரும் இல்லை என்று? என்னதான், அவளது சின்ன மாமானார், மாமியார் மீது பெரிய அபிப்ராயம் எனக்கு இல்லாவிட்டாலும், அந்த வீட்டுக்கு பெரியவர்கள் அவர்கள்தானே? எல்லாவற்றுக்கும் மேலாக இவள் கணவன் என்ன ஆனான்??? ஏன் யாரும் எனக்கு இல்லை என்கிறாள்?!

தவிர, ஏன் இப்படி இருக்கிறாள்? பல மாதங்களுக்கு முன், கல்யாணத்தில் பார்த்தது. அப்பொழுது சந்தோஷமாகத்தானே இருந்தாள்? இப்பொழுது ஏன் இவ்வளவு வாடி இருக்கிறாள்? இவ புருஷனும் ஓரளவு பணக்காரன்தானே? என்ன பிரச்சினை இவளுக்கு?

எனக்கு அவளைப் பார்க்க பார்க்க பாவமாக இருந்தது! என்னைப் போலவே, சுயநலம் பிடித்த மிருகங்களின் மத்தியில் வளர்ந்தாலும், சுயத்தை இழக்காத, நல்ல பண்புகளுடன், தன்னைத் தானே வளர்த்துக் கொண்ட இன்னொரு ஜீவன்!

ம்ம்.. பெரு மூச்சு விட்டேன். அவள் அருகில் சென்றேன்!

என்ன ஆச்சு? ஏன் இப்பிடி இருக்க?

நீ இன்னும் கிளம்பல? நான் உன்னைக் கெளம்பச் சொன்னேன்! அதான் நாளைக்கு இந்த வீட்டை விட்டுட்டு போறேன்னு சொல்லிட்டேன்ல?!

அதான் சாரி சொல்லிட்டேன்ல? இன்னும் ஏன் இப்பிடியே பேசுற? சும்மா சொல்லு! நானும் வீம்பை விடவில்லை!

என்னை அவளும், அவளை நானும், மிக நன்றாகப் புரிந்திருந்தாலும், நாங்கள் ஒன்றாக இவ்வளவு நேரம் தனியாகப் பேசியதே இன்றுதான் என்று நினைக்கிறேன். வாய்விட்டே பேசிக் கொள்ளாதவர்கள், மனம் விட்டா பேசியிருக்கப் போகிறோம்? அதனாலேயே நான் வீம்பாகப் பேசினேன்.

அவளும் வீம்பாகவே பேசினாள்! எனக்கு 3, 4 வருடங்கள் முன்பே பிறந்தவளாயிற்றே?

என் பிரச்சினையை நான் பாத்துக்குறேன். உன்கிட்ட சொல்லனும்னு அவசியமில்லை! நீ போ!

நான் அவளை நெருங்கினேன்! அவள் பின்னாடியே சென்றாள்!

சொல்லு! என்ன பிரச்சினை?

நீ வெளிய போ!

சொல்லு!

நீ வெளிய போ!

சுவர் வரை பின்னாடியே சென்றவள், அதற்கு மேல் நகர முடியாமல் நின்றாள். நான் அவளை நெருங்கினேன்!

சொல்லு!

நீ போடா! நான் பாத்துக்குறேன் என் பிரச்சினையை! நீ யாரு இடையில?

சொல்லு! அழுத்தமாக வந்தது குரல்!

இப்போது அவள் கண்களில் கொஞ்சம் கண்ணீர் எட்டிப் பார்த்தது!

எனக்கோ மனமே தாங்கவில்லை! எத்தனையோ சமயங்களில் தைரியமாக நின்றவள், இன்று கண்ணீர் விடுகிறாளே! இன்னும் என்ன எனக்கு வீம்பு என்று என்னை நானே கடிந்து கொண்டேன்!

அவள் கைகளை அமைதியாக, அழுத்தமாகப் பிடித்தேன். அவளைப் பார்த்துச் சொன்னேன்.

நாம பேசிகிட்டதில்லைதான். ஆனா, உன்னைப் பத்தி, எனக்கு நல்லா தெரியும்! என்னைப் பத்தி உனக்கு நல்லா தெரியும். உன் கேரக்டர்க்கு, எங்க இருந்தாலும், நீ சந்தோஷமா இருப்பேன்னுதான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா, இந்த சூழ்நிலையில உன்னைப் பாத்ததும் என்னால தாங்க முடியலை! அதுனாலத்தான் கோவத்துல கத்துனேன்! மத்தபடி என் வீடு, அப்புடில்லாம் நான் நினைக்க மாட்டேன்னு உனக்கே தெரியும்!

நான் என்ன வெளில பேசினாலும், உனக்கு ஒண்ணுன்னா நான் இருப்பேன்! அதே மாதிரி, எனக்காக யாராவது உண்மையா ஃபீல் பண்ணுவாங்கன்னா, அது இப்போதைக்கு நீ மட்டும்தான்னும் எனக்கு தெரியும்!

அவள் கண்கள் விரிந்தது! அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். இந்தப் பத்து வருடங்களில், இன்றுதான் அவளிடம் இந்த மாதிரி பேசுகிறேன் என்று அவளுக்கு ஆச்சரியம்! அவள் கண்களில் கண்ணீர் அதிகமானது!

சொல்லுக்கா! ப்ளீஸ். என்ன உன் பிரச்சினை?

அவள் இன்னும் என்னை வெறித்துப் பார்த்தாள்!

அக்காவா?!

பளாரென்று என்னை அறைந்தாள். பின் என் மார்பிலேயே சாய்ந்து அழத் தொடங்கினாள்!

பத்து வருடங்கள் கழித்து இன்றுதான் அக்கா என்று அழைத்திருக்கிறேன்!

அவள் இந்த வீட்டுக்கு வந்து, சில மாதங்கள் கழித்து, அவளாக நெருங்கி என் மேல் பாசம் காட்ட முயன்ற போது கூட, அவளை உதாசீனப்படுத்தியவன்! அதற்குப் பின்பும், எப்பொழுதாவது, மிகக் குறைவாக பேசியவன், அதுவும் அவளாக என்னிடம் பேசினாலொழிய பேசாதவன், இன்று நானாக அக்கா என்று சொன்னவுடன் அவளால் தாங்க முடியவில்லை!

தனக்கென்று யாரும் இல்லை என்று புலம்பியவளிடம், நான் இருப்பேன் என்று காட்டிய அன்பினை, அவளால் தாங்க முடியவில்லை! அவள் பாரம் தீர, என் மார்பிலேயே நீண்ட நேரம் அழுதாள்!

அவள் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அந்தப் பிரச்சினையை மட்டுமல்ல, இத்தனை நாளாக அவள் மனதில் இருக்கும் ஒரு விதமான அனாதை என்ற உணர்வையும், ஏன் இவ்வளவு நாளாய் இந்த அன்பைக் காட்டவில்லை என்ற கோபத்தையும், இன்னும் அவள் மனதில் இருந்த சின்னச் சின்ன கவலைகள் எல்லாவற்றையும் சேர்த்தே கரைத்தாள்! ஆகையால் ரொம்ப நேரம் அழுதாள்!

அவளை அணைத்த படியே நானும் இருந்தேன்.

அழுதது அவளாயினும், அவளுடன் சேர்ந்து எனது இறுக்கம், கவலையும் கூட கரைவது போன்ற ஒரு உணர்வு! அவ்வளவு சோகத்திலும், நானும் இதே மனநிலையில் இருப்பேன் என்று எண்ணியிருந்தாள் போலும்.

என்னையும் தேற்றுவது போல், அவள் கைகள், என் முதுகை முழுதாக தடவிக் கொடுத்தது! என்னை ஆசுவாசப்படுத்தியது!

அக்கா இல்லையா? மூத்தவள் கடமையை செய்கிறாள் போலும். அந்த நிலையிலும் எனக்கு சிரிப்பு வந்தது! அவள் எப்போதும் இப்படித்தான், பாசத்தை அள்ளி வழங்கிக் கொண்டே இருப்பாள்!

நீண்ட நேரம் அழுதவளின் அழுகை, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது! சிறிது நேரம் கழித்து விலகினாள்!

பாட்டில் தண்ணீரை நீட்டினேன்! குடித்தவள் தாங்க்ஸ் என்றாள்! அவள் முகத்தில் கொஞ்சம் தெளிவு!

கொஞ்சம் இரு வரேன்!

சமையலறை சென்று இரண்டு கப்களில் டீ எடுத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்ற போது, அவள் முகம் கழுவி கொஞ்சம் பளிச்சென்று இருந்தாள்! நான் டீயுடன் வந்ததை விட, நான் திரும்ப வந்தது, அவளுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது!

தாங்க்ஸ்!

குடி!

குடித்து முடித்தும், இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தோம். சிறிது நேரம் கழித்து சொன்னேன்.

இப்ப சொல்லு! என்ன உன் பிரச்சினைன்னு?

அவள் என்னை பார்த்தாள்! அதில பல கேள்விகள்!

நீ உண்மையான அக்கறையில கேக்குறியா? இத்தனை நாள் இல்லாம, இன்னிக்கி என்ன புதுசா பாசம்? என் மேல பரிதாபப்படுறியா? உன்னை மாதிரியே, எனக்கும் யாருடைய பரிதாபமும் புடிக்காதுன்னு தெரியாதா உனக்கு? எல்லாத்துக்கும் மேல, திடீர்னு நீ வந்து, அக்கான்னு சொல்லி, கொஞ்சம் பாசம் காட்டுனா, நான் ஃபீல் பண்ணி சொல்லிடனுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள்!

எனக்கும் புரிந்தது. மெதுவாகச் சொன்னேன்.

இதுவரைக்கும் நடந்ததை மாத்த முடியாது! அதுக்குன்னு சில விளக்கங்கள் இருக்கும். மாத்த முடியாட்டியும், ஏன் அப்புடி நடந்துன்னு பேசி புரிஞ்சிகிட்டு, இனி அப்படி நடக்காம பாத்துக்கலாம். ஆனா, அது அவ்ளோ முக்கியம் இல்லை இப்ப!

இப்ப முக்கியம், உன் பிரச்சினைதான். என்னால, நீ தற்கொலை வரை போனதை என்னால புரிஞ்சிக்கவே முடியலை. அப்படி என்ன பிரச்சினை உனக்கு?

அவள் இன்னும் வாய் திறக்கவில்லை!

நான் ஒண்ணும் வாய் வார்த்தைக்காக சொல்லலை. நான் தள்ளிதான் நின்னேனே ஒழிய, வெறுத்தது கிடையாது. உன்னை எனக்கு எப்பியுமே பிடிக்கும். இன்னும் சொல்லப் போனா, நீ எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்! பெரிய இன்ஸ்பிரேஷன். சுத்தி நடக்குற எந்தப் பிரச்சினையும் நம்மை பாதிக்காம, தன்னைத் தானே ஒழுங்கா எப்புடி வளத்துக்குறதுன்னு உன்னைப் பாத்துதான் கத்துகிட்டேன்.

உன் ஒழுக்கம், தைரியம், மனவலிமை முக்கியமா, காசு பெருசில்லைன்னு நினைக்கிறது எல்லாமே எனக்கு ரொம்பப் புடிச்ச விஷயம்! அப்படிப்பட்ட நீ இன்னிக்கு இப்பிடி பண்ணங்கிறதை என்னால தாங்க முடியலை.

நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன். எப்போதும் உணர்ச்சியைக் காட்டாத கல்லைப் போல இருப்பவன், இன்று இவ்வளவு பேசியது, அவளுக்கும் மிக்க ஆச்சரியம். அவளும் உணர்ச்சிவயப்பட்டு இருந்ததை அவள் கலங்கிய கண்கள் சொல்லியது.

மெல்ல அவள் கையைப் பிடித்தேன். நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணதையே என்னால தாங்க முடியலை! ஆனா நீ என்னான்னா, உனக்குன்னு யாரும் இல்லைன்னு சொல்றதை எப்டி எடுத்துக்குறது?! இப்டில்லாம் நீ யோசிக்கக் கூட மாட்டியே? ஹரீஷ் என்ன ஆனாரு? உன் மாமானார், மாமியார் என்ன ஆனாங்க? மறந்தும் நான், அவள் அப்பா, அம்மாவைப் பற்றி கேட்கவில்லை.

எனது அன்பில் மிகவும் கரைந்தாள். இருந்தும் தயங்கினாள்! என் கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள்! அவள் உதடுகள் மட்டுமல்ல உடலும் நடுங்கியது!

அவள் சொல்லி முடித்தாள்!

கடுங்கோபத்திலும், திக்பிரம்மை பிடித்தும் இருந்தேன். செயல்களை விட, செய்யத் துணியும் ஆட்கள், அவர்கள் ஸ்டேட்டஸ், வயது, உறவு இவைதான் எனக்கு மிகுந்த பாதிப்பைத் தந்தது.

என் தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தாள். எனக்கே, இப்படி இருக்கையில், இவளுக்கு எப்படி இருக்கும்!

அவள் சொன்னது அப்படி!

 

கல்யாணம் பண்ணிக் கொடுத்ததோட கடமை முடிஞ்சுதுன்னு, அம்மாவும், அப்பாவும் இருந்துட்டாங்க. நீ சும்மாவே என்கிட்ட பேச மாட்ட. அந்த வீட்டுக்கும் வந்தது கிடையாது. அங்க என்ன நடக்குதுன்னு யாருக்காச்சும் தெரியுமா?

என்ன இப்டி சொல்ற? ஹரீஸ் நல்லவர்தானே? உனக்கு புடிச்சுதானே மேரேஜூக்கு ஓகே சொன்ன.

நல்லவர்தான்! ஆனா ரொம்ப நல்லவர், அதான் பிரச்சினை. பிசினஸ், படிப்பு இதுலல்லாம் பயங்கர புத்திசாலியா இருக்கிற ஆளு, கண்மூடித்தனமான பாசத்துல அடி முட்டாளா இருக்குறாரு!

என்ன சொல்ற? பொதுவா நீ மத்தவிங்க மேல பாசமா இருக்கனும்னுதானே நினைப்ப. நீ எப்பிடி இதுல தப்பு சொல்ற?

நாம பாசம் வெக்குறதுக்கும், மரியாதை வெக்குறதுக்கும் ஒரு தகுதி வேணும்! ஆனா, தொடர்ந்து தன்னை ஏமாத்திகிட்டு இருக்குற ரெண்டு பேரை கண்மூடித்தனமா நம்புற முட்டாளை என்னன்னு சொல்றது? நான் ஏமாத்துவேன், இருந்தும் உன் புருஷன் நம்புவான், அவன்லாம் ஆம்பளையா, அவன் லூசுன்னு என்கிட்டயே ஏளனமா சொல்றவிங்களை என்ன சொல்றது?

நீ யாரைச் சொல்ற?

வேற யாரு?! என் சின்ன மாமனார்தான். எல்லாம் தெரிஞ்சும் சும்மா இருக்குறது என் சின்ன மாமியார்!

ஏய், என்ன சொல்ற? அவிங்களைப் பாத்தா நல்லவங்க மாதிரி இருந்துது. அவிங்க உன் கிட்ட கோபப்பட்டு கூட நான் பாத்ததில்லையே.

ஏளனமாகச் சிரித்தாள்… பொய்யா நடிக்கிறவன்தான், காரியம் முடியற வரைக்கும், சுயரூபத்தை வெளிய காட்டிக்கவே மாட்டான். உண்மையா இருக்குறவன், எல்லா உணர்ச்சியையும் காட்டுவான். அதான், அவிங்க என்கிட்ட கோவப்பட்டதில்லை.

கல்யாணம் ஆன உடனே, அவரு என்கிட்ட சொல்லிட்டாரு. அவிங்க அப்பா அம்மா போனதுக்கப்புறம், அவரை நல்லபடியா வளத்து, பாசமா பாத்துகிட்டவிங்க, அவரு சித்தப்பாவும், சித்தியுந்தானாம்.

அதுனால, அவிங்க, அப்பா, அம்மாவுக்கும் மேலியாம். அதுனால, அவிங்களைப் பத்தி சும்மாக் கூட தப்பா சொல்றது, தேவையில்லாம பேசுறது, கோள் மூட்டுறது, முக்கியமா அவிங்ககிட்ட இருந்து பிரிக்க நினைக்கிறது இதெல்லாம் பிடிக்காதுன்னு கண்டிஷனா சொல்லிட்டாரு!
நானும், அவ்ளோ நல்லவிங்களை என்னத்தை போயி சொல்லப் போறோம்னு கம்முனு இருந்துட்டேன். ஆனா, கொஞ்சம் கொஞ்சமாதான் அவிங்க சுயரூபம் தெரிஞ்சுது!

முதல்ல, நான் கொண்டு வந்த சீர் பத்தலைன்னு, என் மாமியார் மூலமா ஆரம்பிச்ச பிரச்சினை, கொஞ்சம் கொஞ்சமா வளந்து ரொம்பக் கேவலமான நிலைக்கு போயிருச்சி.

என்ன சீர் பத்தலையாம்? பயங்கர ஆடம்பரமாதானே கல்யாணம் நடந்துது? நான் அதுல எந்த பிரச்சினையும் பண்ணலியே?

கல்யாணத்துலல்லாம் திருப்திதான். அப்ப, அமைதியாத்தான் இருந்தாங்க என்று சொன்னவள் என்னையே பார்த்தாள்.

 

அப்பா, அம்மாவை, இந்த பிசினஸ், சொத்து இதுலெல்லாம் இருந்து தள்ளி வைக்க, என் கல்யாணம் முடியட்டும்னுதான் வெயிட் பண்ணியா?

நான் ஆச்சரியமானேன்! அது எப்படி உனக்கு தெரியும்?!

அவள் இகழ்ச்சியாக சிரித்தாள். நீ அப்பாவை பிசினஸ் பக்கம் வர வேண்டாம்னு சொன்னது, சொத்துல பங்கில்லை, வீட்டோட இருங்க, மாசா மாசம் காசு மட்டும் தரேன்னு சொன்னது, எல்லாம் அவங்களுக்கும் தெரியும். தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் அவிங்க ஆட்டம் ஆரம்பிச்சுது.

பெத்தவிங்க கையில பெருசா காசில்லை. செல்வாக்குள்ள உனக்கோ, அவிங்களை சுத்தமா புடிக்காது. அவிங்களையே புடிக்கதவன், அவிங்க பொண்ணையா கண்டுக்கப் போறேன்னு நினைச்சுகிட்டாங்க. அதுக்கேத்தா மாதிரி அவிங்களும் அடுத்து வந்த தல தீபாவளி, இன்னும் மத்த சீரெல்லாம் காசில்லைன்னு செய்யவே இல்லை. அதுல ஆரம்பிச்சுது அவிங்க கொடுமை!

முதல்ல காசுக்காக ஆரம்பிச்ச விஷயம், எனக்கு யாருமில்லை தெரிஞ்சதும் அவிங்க ஆட்டம் ஓவராயிடுச்சு!

பணம்த்துக்காக உன்னைக் கொடுமை பண்றது, அதை உன் புருஷன் புரிஞ்சிக்காதது இதான பிரச்சினை? ஹரீஸ் அடிப்படையில நல்லவர்தானே? இதுக்கா சூசைட் வரைக்கும் போன?

அவள் என்னைப் பார்த்த பார்வையே சொன்னது, வேறேதோ பெரிதாக இருக்கிறது என்று!

இன்னும் என்ன?

பணத்துக்காக ஆரம்பிச்ச விஷயம், கொஞ்சம் கொஞ்சமா என் மாமனாரோட வக்கிர புத்தியை காமிச்சுது.

அவருக்கு பல பெண்களோட தொடர்பு இருக்கு. அவரோட செக்ரட்டரி முதற்கொண்டு, சொந்த ஆஃபிஸ்லியே சிலரோட கனெக்ஷன் இருக்கு. அது, அவர் சொந்த விஷயம். ஆனா, போகப் போக….

சொல்லிக் கொண்டே இருந்தவள் உடைந்து அழுதாள்.

எனக்கோ புரிந்து பயங்கரக் கோபம் வந்தது. என்ன பண்ணான் உன்னை? ம்ம்?

அவன் என்னை, என் விருப்பமில்லாம ரேப் பண்ணியிருந்தா கூட பரவாயில்லை. ஆனா, என்னை சித்ரவதை பண்றான். வக்கிரமா பேசுறான். வார்த்தையிலியே கொல்றான்.

எ… என்ன பண்ணான்க்கா? அவள் கையை இறுகப் பற்றினேன். என் தோளிலேயே சாய்ந்து அழுதவள், சிறிது நேரம் கழித்து சொன்னாள்.

அவன் ஆசைப்படுறப்பல்லாம், நான் அவன் கூட படுக்கனுமாம்! அதுக்கு, எனக்கு 3 மாசம் டைம் கொடுத்திருக்கான். சிரிச்சுகிட்டே சொல்றான், நீ யார்கிட்ட வேணா போயி சொல்லிக்கோ. உன் புருஷனே, இதை முதல்ல நம்ப மாட்டான். உன்னைதான் அசிங்கமா சொல்லுவான். உன் அப்பா, அம்மாவும் எதுக்கும் லாயக்கில்லை. நான் காசு தர்றேன்னு சொன்னா, அவிங்க கண்டுக்காம கூட இருப்பாங்க. சொல்லப் போனா அவிங்களே அனுப்பி வைப்பாங்க, அந்த மாதிரி கேரக்டர்தானே அவிங்க. உன், தம்பியும், உன்னை மதிக்கவே மாட்டான்! நான் உனக்கு 3 மாசம் டைம் தரேன். நல்லா யோச்சிச்சிட்டு வா நு சொன்னான்!

அவன் பிளான் பண்ணிதான் பண்ணியிருக்கான். ஆரம்பத்துல இருந்தே எங்க அந்தரங்கத்துல அவன் தலையிடுவான். கல்யாணமான புதுசுலியே, எனக்கு ஒரு தோஷம் இருக்கு, அதன் படி, இன்னும் ஒன்றரை வருஷத்துக்கு, மாசம் ஒரு தடவைதான் உறவு வெச்சுக்கனும், இல்லாட்டி என் உயிருக்கே ஆபத்துன்னு என்னையும், ஹரீசையும் கூப்பிட்டு சொன்னான். இந்த லூசும் ஓகேப்பான்னு சொல்லுது! கணவன் மனைவியோட பெர்சனல் லைஃபுக்குள்ள தலையிடுறவனை என்னன்னு சொல்லுறது?

அப்புறம் வேணும்னே, அவரை கண்டினியுவசா ட்ரிப்புக்கு அனுப்புனான். சின்னச் சின்ன விஷயங்கள்ல, நான் பண்ணாததை, பண்ணதாவும், எங்களை மதிக்கிறதேயில்லைங்குற மாதிரியும் இன்டைரக்ட்டா சொல்லி, அவிங்க முன்னாடியே என்னை திட்ட வெச்சான். எனக்கு ஆரம்பத்துல புரியலை, ஏன் இப்பிடி நடந்துக்கிறாங்கன்னு. ஆனா, அவன் என்ன எதிர்பாக்கிறான்னு தெரிஞ்சதும்தான் புரிஞ்சுது!

அவன், என்னை வேணும்னு, சொல்லி ஒரு மாசம்தான் ஆச்சு. அதுக்குள்ளியே ரொம்ப சித்ரவதையை அனுபவிச்சிட்டேன். அவரை வெச்சுகிட்டே, அவரு பாக்காதப்ப என்னை அசிங்கமாப் பாப்பான். அசிங்கமா சைகை செய்வான். யாரும் இல்லாதப்ப கமெண்ட் அடிப்பான். ட்ரிப் போறாருன்னா, நைட்டு துணைக்கு கூட படுத்துக்கட்டுமான்னு அவர் முன்னாடியே கேப்பான். இவருக்கு அது எதுவும் தப்பா தெரியாது.

என்கிட்ட வந்து, காய்ஞ்சு போயிருப்ப, அவனே மாசம் ஒரு தடவைதான் தொடுவான். நான் நினைச்சா அதையும் நிறுத்த முடியும். உன் புருஷன் அதையும் கேப்பான். அவன் ஒரு ஆம்பிளைன்னு ஏன் வெயிட் பண்ற? அவனையே ஆட்டிப் படைக்கிற நான் ஆம்பளையா, இல்ல அவனா? பேசாம நான் சொல்றதேயே கேளுங்கிறான்!

ஒரு தடவை, ஹரீஸ்கிட்ட, அந்தாளு கால்ல அடிபட்டுடுச்சின்னு ஏதோ ஹெல்ப் கேட்டதுக்கு, நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்னு சொன்னான். அதுக்கு என் புருஷனும், அவருக்கு வலிக்குதுன்னா, காலை கூட புடிச்சு விடனும், அவரு உன் அப்பா மாதிரின்னு கோவமா பேசுறாரு.

அவர் போனதுக்கப்புறம், நான் கேட்டா, உன் புருஷன், என் காலை மட்டுமில்லை, வேறெதை வேணா புடிக்கச் சொல்லுவான்னு அசிங்கமா சிரிக்கிறான். இந்த சித்ரவதையைத் தாங்க முடியலைடா! என்று சொல்லி அழுதாள்!

அதிர்ச்சியில் இருந்தாலும், கோபத்தில் கேட்டேன். அவன் பொண்டாட்டி, எப்புடி இதை வேடிக்கை பாக்குறா?

அவளுக்கு பணம் இருந்தா போதும்! புருஷன் யோக்கியதை, அவனோட கனெக்ஷன் எல்லாம் தெரியும். மாசம் அவளுக்கு ஒரு நகையோ, புடவையோ வாங்கிக் கொடுத்தா போதும். கம்முனு இருப்பா. நினைச்சப்ப ஃபங்க்ஷன், க்ளப், ஹோட்டலுக்கு போகனும். அவ்ளோதான். நல்ல சீர் வரும்னு நினைச்சுதான் என்னை மருமகளா ஏத்துகிட்டாளாம். இப்ப, சொத்து இல்லைன்னு தெரிஞ்சவுடனே அவளுக்கு எம் மேல செம கோவம். அதுனால, புருஷன் என்ன பண்ணாலும் கண்டுக்க மாட்டா!

ஹரீஸ்கிட்ட மனசு விட்டு பேசிப் பாத்தியா?

கண்மூடித்தனமா நம்புற முட்டாள்கிட்ட, என்ன பேசச் சொல்ற? அதையும் மீறி ரெண்டு மூணு தடவை பேசுனப்பல்லாம், என்கிட்டதான் சண்டைக்கு வந்தாரு. வெக்கத்தை விட்டு, ஒரு தடவை, அவிங்க அப்பா பார்வை சரியில்லைன்னு சொன்னதுக்கு, என் புத்தி கெட்ட புத்தி, வக்கிர புத்தின்னு சொல்லி அடிக்க வந்துட்டாரு! என்ன பண்ணச் சொல்ற???

கட்டுன புருஷன் நம்ப மாட்டேங்குறான். மாமானார் தப்பா நடந்துக்குறான். மாமியாரு வேடிக்கை பாக்குறா. என் அப்பா அம்மாகிட்ட சொல்றது வேஸ்ட். உனக்கு என்னைப் பத்திய கவலையே இல்லை. அப்ப நான் யார்கிட்ட போயி, என்னான்னு சொல்றது?

போடா, இப்ப மட்டும் எதுக்கு வந்த? இத்தனை வருஷமா கண்டுக்காதவன், இப்ப என்ன புதுசா பாசம்? அன்னிக்கு சொன்னியே, நீ அனாதை, உனக்கு யாருன்னு இல்லைன்னு! இப்ப நான் உன்னை விட பெரிய அனாதை! சந்தோஷமா உனக்கு! இப்ப எதுக்கு வந்தியாம்? போ! வந்துட்டான் பெருசா!

எத்தனை நாளா உன்கிட்ட பேசியிருக்கேன். பெரிய இவனாட்டாம், பேசாமியே இருந்துட்டு, இன்னிக்கு என்னாத்துக்கு வந்த? உனக்கு அவ்ளோ வீம்பு இருக்குன்னா, எனக்கு எவ்ளோ வீம்பு இருக்கும்? அப்படி ஒண்ணும், நீ என் விஷயத்துல தலையிட வேண்டாம்.

இவ்வளவு நேரம் இருந்த மனப்பாரம் சற்றே நீங்கிய நிம்மதியில், அவள் எப்போதும் எதிர்பார்க்கும் என் பாசம், புதிதாக கிடைத்த சந்தோஷத்தில் என்னைத் திட்டிக் கொண்டிருந்தாள்! என் தோளில் சாய்ந்து கொண்டே!

 

இந்த கதையை பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் பண்ண மறவாதிகள் ⇓

You may also like...