வைஷு

“ம்ம்ம்ம்… நான் உன்னை கட்டிக்கிறதுக்கு.. எனக்கு வரதட்சணை கொடுக்கணும்ல..? அதுல கழிச்சுக்கோ..!!”

“ஹாஹா.. உனக்குலாம் பொண்டாட்டியா வந்து இம்சை அனுபவிக்கிறதுக்கு.. நீதாண்டா எனக்கு வரதட்சணை கொடுக்கணும்..!!”

நுங்கம்பாக்கம் ஹைரோடில் இருந்தது அந்த ரெஸ்டாரன்ட். பளிச்சிடும் இரவு விளக்குகளோடு, பளபளப்பாய் கம்பீரமாய் நின்றிருந்தது. சற்றே காஸ்ட்லியான ரெஸ்டாரன்ட்தான். நான்தான் மெனுகார்டின் ப்ரைஸ் காலத்தை பார்த்து வாயைப் பிளந்து கொண்டிருந்தேன். வைஷூ மிகவும் கேஷுவலாக அதைப் புரட்டி, எனக்கும் சேர்த்து அவளே ஆர்டர் செய்தாள். 

ஆர்டர் செய்த ஐட்டங்கள் வரும் வரை, அவ்வப்போது.. அருகில் இருப்பவர்கள் கவனியாத போது.. எனது கன்னம், கழுத்து, காது, உதடுகள் எல்லாம்.. காதலாக ‘இச்.. இச்.. இச்..’ செய்து எச்சிலாக்கினாள். அவளது ஆர்வம் எனக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. நீண்ட நாளுக்கப்புறம் என்னை பார்ப்பதால், அவளும் சற்று வேகமாக இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆர்டர் செய்தவைகள் வெண்ணிற பீங்கான் ப்ளேட்டுகளில் வந்து சேர்ந்தன. எல்லாம் எங்கள் ஊரில் நான் சாப்பிடும் ஆடு, கோழி, மீன்தான்..!! ஆனால்.. வித்தியாசமான விதத்தில், வித்தியாசமான சுவையில் தயாரிக்கப் பட்டிருந்தன. நானும், வைஷூவும் பொறுமையாக.. ஊர்க்கதைகளை பேசிக்கொண்டு.. காரணமே இல்லாமல் சிரித்துக்கொண்டு.. கண்களால் காதலாய் பார்த்துக்கொண்டு.. சாப்பிட்டு முடித்தோம். முடித்ததும் என் செல்போன் அடித்தது. சந்துரு..!!!!

“சொல்லுடா மாப்ள..” செல்போனை காதில் வைத்தபடி நான் சொன்னேன்.

“எங்கடா இருக்குற..?”

“ஏன் கேக்குற..?”

“அக்கா பக்கத்துல இருக்காளா..?”

“ம்ம்.. ஆமாம்.. பக்கத்துலதான் இருக்குறா..?” சொல்லிக்கொண்டே நான் அவன் அக்காவின் தோளில் கைபோட்டு, அவளை என்னோடு இறுக்கிக் கொண்டேன்.

“ஒரு ஹெல்ப் பண்றியா எனக்கு..?”

“என்ன..?”

“நான் அவகிட்ட ஒரு மெட்டீரியல் கேட்டிருந்தேன்.. வர்றப்போ அதை வாங்கிட்டு வந்துர்றியா..?”

“அடிங்.. உனக்கு கொரியர் வேலை பாக்கத்தான்.. நான் மெட்ராஸ் வந்தனா..?”

“த்தா.. வந்ததுல இருந்து எனக்கு ஊர்ப்பட்ட டார்ச்சர் கொடுத்திட்ட.. அட்லீஸ்ட் உருப்படியா இதையாவது செய்டா.. ப்ளீஸ்.. அந்த மெட்டீரியல் எனக்கு உடனே தேவைப்படுது மச்சான்..!!” அவன் சற்றே கெஞ்சலாக சொல்ல,

“சரி சரி.. விடு.. ரொம்ப கெஞ்சாத.. வாங்கிட்டு வர்றேன்..”

“தேங்க்ஸ்டா.. அப்டியே வர்றப்போ.. கைல ரெண்டு பீர் புடிச்சுட்டு வா..”

“த்தா.. எங்கிட்ட காசுலாம் இல்லை..”

“அக்காட்ட கேளு மச்சான்.. நீ கேட்டா.. கண்டிப்பா கொடுப்பா..!!”

“நான்லாம் கேட்க மாட்டேன்.. இந்தா.. போனை அவகிட்ட கொடுக்குறேன்.. நீயே கேட்டு..”

நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, சந்துரு காலை கட் செய்தான். நான் புன்னகையுடன் வைஷூவை ஏறிட, அவள் சற்றே எரிச்சலான குரலில் கேட்டாள்.

“என்னவாம்..?”

“உன்கிட்ட எதோ மெட்டீரியல் கேட்டிருந்தானாமே..?”

“ஆமாம்..”

“அது உடனே வேணும்கிறான் ..!! வாங்கிட்டு வர சொல்றான்..!!”

“ஓஹோ..? ம்ம்ம்ம்ம்ம்…. அப்போ ஒன்னு பண்ணலாம்.. நேரா என் ரூமுக்கு போலாம்.. மெட்டீரியல் எடுத்து தர்றேன்..!! வாங்கிட்டு.. அங்க இருந்து.. நீ ஒரு ஆட்டோ புடிச்சு அவன் ரூமுக்கு போயிடு.. சரியா..?”

“ம்ம்.. ஓகே..”

நானும் வைஷுவும் ரெஸ்டாரண்டில் இருந்து கிளம்பியபோது மணி எட்டை நெருங்கி இருந்தது. மீண்டும் ஸ்கூட்டியில் பயணம். தெருவிளக்குகள் வெளிச்சத்தை அள்ளித் தெளித்திருந்த தார் ரோட்டில், ஆள் நடமாட்டமில்லாத ஏரியாவில் பயணித்தபோது, நான் அவளை பின்னால் இருந்து இறுக்கி அணைத்துக் கொண்டேன். அடித்த குளிருக்கு அந்த அணைப்பு இதமாக இருந்தது. வைஷூவும் இப்போது என் சில்மிஷங்களை தடுக்கவில்லை. அனுமதித்தாள்..!!

வாலஸ் கார்டனில் இருக்கிறது அவள் தங்கியிருக்கும் அறை. வாலஸ் கார்டன் முதல் தெருவில் கொஞ்ச தூரம் சென்று, பின்பு இடப்புறமாக திரும்பி, அந்த குறுகிய சாலையில் வண்டியை செலுத்தினாள். குண்டும் குழியுமாக இருந்த சாலையில் பொறுமையாக சென்ற ஸ்கூட்டி, கையில் பெரிய சூட்கேசுடன் எதிரே வந்த அந்த பெண்ணை பார்த்ததும், ப்ரேக் அடித்து நின்றது.

“என்னடி அதுக்குள்ள கிளம்பிட்ட..? 11’O க்ளாக்தான ட்ரெயின்..?” வைஷூ ஹெல்மட்டை கழட்டிக்கொண்டே அந்த பெண்ணிடம் கேட்டாள்.

“ஆமாண்டி.. போரடிச்சது..!! நீ வேற இல்ல.. அதான்.. ஸ்டேஷன்லயாவது போய் இருக்கலாம்னு கெளம்பிட்டேன்..!!”

“ஓ..!! ம்ம்ம்ம்.. அப்புறம்… இது.. அசோக்.. சொல்லிருக்கேன்ல..? என் அத்தை பையன்..!! அசோக்.. இது என் ரூம் மேட்.. வனிதா..”

வைஷூ அவளிடம் என்னை அறிமுகம் செய்து வைக்க, அவள் “ஹாய்..” என்று ஒரு புன்னகையை வீசினாள். நானும் ஒரு ஹாய் சொன்னவாறே அவளை மேலும் கீழும் அளந்தேன். அவள் மீண்டும் வைஷூவின் பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள். கேஷுவலான குரலில் கேட்டாள்.

“அப்புறம்டி.. என்ன சொல்ல.. உன் உயிர்த்தொழிட்ட..?”

“காட்.. மறந்தே போயிட்டேன் பாரு.. நல்லவேளை.. நான் சீக்கிரம் வந்ததும் நல்லதா போச்சு.. இந்தா.. இந்த கிஃப்டை அவகிட்ட கொடுத்திடு..!! மேரேஜுக்கு வரமுடியலை.. நான் சொன்னேன்னு.. ஆயிரம் ஸாரி சொல்லிரு அவகிட்ட..”

சொல்லிக்கொண்டே வைஷூ தன் ஹேன்ட்பேக்கை திறந்து அந்த குட்டி கிப்ட் பார்சலை எடுத்துக் கொடுக்க, அதை அந்த வனிதா புன்னகையுடன் வாங்கி தன் ஹேன்ட் பேக்குக்குள் திணித்துக் கொண்டாள்.

“அப்புறம்..?? சார் இன்னைக்கு நைட்டு இங்கதான் தங்க போறாரா..?” அவள் சாதாரணமாகத்தான் கேட்டாள். ஆனால் வைஷுவோ பதறிப் போய் பதில் சொன்னாள்.

“ஐயையோ.. இல்லைடி.. இப்போ கெளம்பிருவான் ..!! என் தம்பி ஒரு மெட்டீரியல் கேட்டு விட்டுருக்கான்.. ஜஸ்ட் அதை எடுத்துட்டு.. கெளம்பிருவான் ..!!”

“ஓகேடி.. யூ கேரி ஆன்.. நான் கெளம்புறேன்..”

“ஸ்டேஷன் எப்டி போகப் போற..?”

“மெயின்ரோட் போய்.. ஏதாவது ஆட்டோ புடிச்சுக்குறேன்..!! பை..!!”

சொல்லிவிட்டு அவள் பெட்டியை கைமாற்றிக் கொண்டு, மெயின்ரோட் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் போவதையே கொஞ்ச நேரம் வெறித்த வைஷூ, அப்புறம் ஹெல்மட்டை அணிந்து கொள்ளாமலே, வண்டியை ஸ்டார்ட் செய்தாள். ஸ்டார்ட் செய்த பத்தாவது வினாடியே வண்டி மீண்டும் நின்றது. வீடு வந்துவிட்டது..!!

வைஷு வண்டியை பார்க் செய்து விட்டு வந்தாள். கேட்டை திறந்து உள்ளே நுழைந்தோம். வீட்டுக்கு பக்கவாட்டில் இருந்த படிக்கட்டை அடைந்து அவள் மேலே ஏற, நான் அவளை பின்தொடர்ந்தேன். சற்றே கிண்டலான குரலில் வைஷூவிடம் கேட்டேன்.

“பார்த்தா நல்ல பொண்ணு மாதிரி இருக்குறா..? உன்கூட வந்து எப்டி சேர்ந்தா..?”

“யாரை சொல்ற..?”

“அவதான்.. அந்த வனிதா.. உன் ரூம் மேட்..!!”

“ஓஹோ..? அவ நல்ல பொண்ணா..? எதை வச்சு அவ நல்ல பொண்ணுன்னு சொல்ற..?”

“அடக்க ஒடுக்கமா ட்ரெஸ் பண்ணிருக்கா.. அமைதியா பேசுறா.. பக்கத்துலையே இவ்ளோ பெர்சனாலிட்டியா.. ஹீரோ மாதிரி நான் ஒருத்தன் இருக்குறேன்.. என்னை சைட் அடிக்கவே மாட்டேன்றா..!! ஏய்.. மொறைக்காத..!! அப்புறம்.. எல்லாத்துக்கும் மேல.. ஒரு பொண்ணு மூஞ்சியை பார்த்தாலே தெரியாதா..? அவ நல்ல பொண்ணா இல்லையான்னு..? எனக்கும் மூளைன்னு ஒன்னு இருக்குல..?”

“ஓஹோ..? மூளைலாம் இருக்கா உனக்கு..? உன் மூளையை கொண்டு போய்.. முனியாண்டி விலாஸ்ல குடு..!!” அவள் எரிச்சலாக சொல்ல,

“என்னடி இவ்ளோ கேவலமா சொல்லிட்ட..?” நான் பரிதாபமாக கேட்டேன்.

“பின்ன..? அவளை பத்தி என்ன தெரியும் உனக்கு..? அவ இதுவரை ஏழு பேரை லவ் பண்ணிருக்கா.. நாலு பேர் கூட செக்ஸ் வச்சிருக்கா..!! இதுலாம் எனக்கு தெரிஞ்ச கணக்கு.. தெரியாம எத்தனையோ..? இப்போ கூட.. பதினோரு மணி ட்ரெயினுக்கு.. மூணு மணி நேரம் முன்னாடியே கெளம்பி போறா..!! என்ன திருட்டு வேலை பண்ண போறான்னு.. ஃபால்லோ பண்ணி பாத்தாத்தான் தெரியும்..!!” அவள் சொல்ல சொல்ல நான் ஷாக் ஆகிக் கொண்டிருந்தேன்.

“நெஜமாவா வைஷூ.. பாத்தா அப்டி தெரியலையே..?”

“பாக்குறதுக்கு கொழந்தை மாதிரி இருக்காள்ல..? அந்த கொழந்தை என்னென்ன வேலை பண்ணிருக்கு தெரியுமா..? பொறந்த நாளைக்கு விஷ் பண்ணலைன்னு.. ஒரு பாய்பிரண்டை மாத்திருக்கா..!! இன்னொருத்தன்.. வேலண்டைன்ஸ் டேக்கு கிஃப்ட் கொடுக்கலை..”

“ம்ம்.. அப்புறம்..?”

“அப்புறம் என்ன..? அடுத்த நாள்.. வேற ஒருத்தனோட இவ வேலண்டைன்ஸ்டே கொண்டாடினா..!!”

“அடிப்பாவி..!!”

“பச்சைப்புள்ளை மாதிரி இருப்பா.. பண்ற வேலைலாம்.. பயங்கரமா இருக்கும்..!! செக்ஸ் விஷயத்துல ரொம்…..ப ஆர்வம்.. அலைஞ்சான் கேஸூ..!! அவளை போய் நா கூசாம.. நல்லவன்னு சொல்ற நீ..!! பொண்ணுகளைலாம் சும்மா பார்வையாலேயே எடை போட்டுடாத.. பலப்பல டேஞ்சர் பார்ட்டிங்கல்லாம் இருக்குதுங்க..!! உனக்குலாம் என்னை மாதிரி டீசண்டான பொண்ணு கெடைச்சதுக்கு.. நீள்லாம் எனக்கு கோயில் கட்டி கும்பிடனும்..!! உள்ள வா..!!”

வைஷூ சொல்லிக்கொண்டே கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். ஹேன்ட் பேக்கை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு, சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள். நானும் அமைதியாக அவளுக்கு அருகே சென்று அமர்ந்தேன். அவள் அருகில் இருந்த ரிமோட்டை எடுத்து டிவி ஆன் செய்தாள். எதுவும் பிடிக்காமல் ஒவ்வொரு சேனலாக தாவிக் கொண்டிருந்தவளையே நான் கொஞ்ச நேரம் வெறித்தேன். அப்புறம் என் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்தவாறே கேஷுவலான குரலில் அவளிடம் கேட்டேன்.

“வைஷூ.. அந்த வனிதாவோட நம்பர் கொஞ்சம் சொல்லேன்..? ஸேவ் பண்ணிக்கிறேன்..!!”

இப்போது வைஷூ டிவியில் இருந்த பார்வையை எடுத்தாள். திரும்பி என்னை பார்த்து மிகவும் உக்கிரமாக ஒரு முறை முறைத்தாள்.

“ஏண்டி முறைக்கிற..?”

“அவ நம்பர் எதுக்கு உனக்கு..? அஞ்சாவது ஆளா.. அவளை அனுபவிக்க அடி போடுறதுக்கா..?”

“சேச்சே.. அதுக்குலாம் இல்லடி..!!”

“அப்புறம்..?”

“நமக்கு தெரிஞ்ச பொண்ணா போயிட்டா.. எதோ.. நம்மால முடிஞ்ச அட்வைஸை அவளுக்கு சொல்லலாமேன்னு..”

“ஒரு மசுரும் சொல்ல வேணாம்..!! மவனே.. நான் இல்லாம.. வேற எவளையாவது தொட்டுப் பாக்கலாம்னு.. கனவுல கூட நெனச்சுடாத..!! கொன்னேபுடுவேன்..!!” அவள் என் சட்டையை கொத்தாக பற்றி எச்சரிக்க, நான் இப்போது சற்று பம்மினேன் .

“என்ன வைஷூம்மா.. என்னை இப்டி சந்தேகப்படுற நீ..? லட்டு மாதிரி என் லவ்வர் நீ இருக்குறப்போ.. நான் ஏன் கண்ட நாயையும் தொட நினைக்கப் போறேன்..?” என்று கொஞ்சலாக சொன்னவாறு அவளது இடுப்பில் கைபோட்டு இழுத்து அணைத்தேன்.

1 comment on “வைஷு

உங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்