வைஷு

“தண்ணியா…? ச்சீச்சீ.. தள்ளி உக்காரு..!! பேட் பாய்..!!”

“அடிங்ங்ங்… உன்னை விட்டா.. ஒயின்ஷாப்ல இருக்குற மொத்த சரக்கையும்.. ஒரே நாள்ல முடிச்சுடுவ.. நீ என்னை பேட் பாய்னு சொல்றியா..? நேரம்டா..!!”

“சரி விடு..!! நான் குடிப்பேன்.. ஒத்துக்குறேன்..!! ஆனா.. அதுக்காகலாம் உனக்கு தண்ணி வாங்கித் தர முடியாது..!!”

“மச்சான்.. காலைல இருந்து உன் டார்ச்சரை ரொம்ப அனுபவிச்சுருக்கேன்டா.. அதுக்காகவாவது வாங்கிக் கொடுடா ப்ளீஸ்..!!” இப்போது அவன் குரல் சற்று பரிதாபமாக ஒலித்தது.

“என்னடா.. ரொம்ப ஓவரா பேசுற..? அப்டி என்ன பண்ணிட்ட..?”

“என்ன பண்ணிட்டனா..? நீ மெட்ராஸ் வர்றேன்னு.. நான் தங்கி இருந்த வீட்டுல.. உனக்குன்னு ஒரு ரூம் ஒதுக்கி.. அதை தொடைச்சு கிளீன் பண்ணிருக்கேன்..!! காலங்காத்தால எந்திரிச்சு.. உன்னை வந்து ரயில்வே ஸ்டேஷன்ல பிக்கப் பண்ணிருக்கேன்..!! ஹாட் வாட்டர் போட்டுக் கொடுத்திருக்கேன்..!! ஆபீசுக்கு லீவ் போட்டு.. இன்னைக்கு பூரா உன் கூட பைக்ல சுத்திருக்கேன்..!! அதுலாம் கூட பரவால்ல..!! எல்லாத்துக்கு மேல.. நீ இன்டர்வியூ போனப்புறம்.. இந்த இத்துப்போன கடைல.. இரண்டு மணி நேரம் உக்காந்திருந்திருக்கேன்..!!” 

சந்துரு சீரியஸாக பேசிக்கொண்டிருக்க, நான் மெல்ல திரும்பி டீக்கடைக்காரனை பார்த்தேன். அவன் இப்போது முன்பை விட அதிகமாக முறைத்தான்.

“சரி மாப்ள.. ஓகே.. ட்ரீட்தான..? தர்றேன்.. ஆனா.. இன்னைக்கு இல்லை.. நாளைக்கு..!!”

“ஏன்.. இன்னைக்கு என்ன..?”

“இன்னைக்கு நான் கொஞ்சம் பிஸி..!!”

“பி..பிஸியா..?” அவன் எதோ கேட்க கூடாததை கேட்டவன் மாதிரி முகத்தை சுளித்தான்.

“எஸ்.. பிஸி..!! நான் நைட்டு ரூமுக்கு வந்துர்றேன்.. இப்போ நீ கெளம்பு..!!”

“கெளம்பவா..? எங்க போற நீ.. நான் இல்லாம..?”

“எங்கயோ போறேன்.. உனக்கு என்ன..? டீக்கு காசு கொடுத்துட்டு கெளம்பு..!!”

“ம்ஹூம்.. எங்க போறேன்னு சொல்லு.. அப்போத்தான் கெளம்புவேன்..!!”

“ப்ச்.. சொன்னா கேளு.. அதுலாம் உனக்கு தேவையில்லாதது.. கேட்டா நீ ரொம்ப கஷ்டப்படுவ..!!”

“பரவால்ல.. சொல்லு..!!”

“கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..?”

“ஆமாம்.. சொல்லு..!!”

அவன் பிடிவாதமாக சொல்ல, நான் கொஞ்ச நேரம் அவன் முகத்தையே அமைதியாக பார்த்தேன். அப்புறம் கண்ணை சிமிட்டியவாறு, மெல்லிய குரலில் சொன்னேன்.

“உன் அக்கா வர்றேன்னுருக்கா..!! ரெண்டு பெரும் வெளில போறோம்..!!”

“அக்காவா..???? என்னடா சொல்ற..????” அவன் பலமாக அதிர்ந்தான்.

“தமிழ்லதான சொன்னேன்.. புரியலையா..?”

“நீ.. நீ மெட்ராஸ் வர்றது அவளுக்கு தெரியுமா..?”

“ஹாஹ்ஹாஹ்ஹ.. இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கியே மாப்ள..!! ஹையோ ஹையோ..!! என்னைய மெட்ராஸ் வர சொல்லி நச்சரிச்சது.. இந்த கம்பெனில என் ரெஸ்யூம் ஃபார்வர்ட் பண்ணினது.. எனக்கு இன்டர்வியூ எடுத்தது.. இந்த ஆஃபர் லெட்டர் வாங்கித் தந்தது.. எல்லாமே சாட்சாத் உன் அக்கா வைஷூவேதான்..!!”

நான் சொல்ல சொல்ல, அவன் முகம் விளக்கெண்ணை குடித்த மாதிரி மாறியது. மிகவும் பரிதாபமான குரலில் சொன்னான்.

“மச்சான்.. நீங்க ரெண்டு பேரும் பண்றது.. கொஞ்சம் கூட நல்லால்லடா..!!”

“என்ன நல்லால்ல..?”

“அவ உனக்கு அக்கா மாதிரிடா..!!”

“அடிங்.. கொய்யால..!! அப்டியே போட்டன்னா.. உனக்கு அக்கான்னு சொல்லு.. அதென்ன எ்னக்கு அக்கான்னு சொல்றது..? அவ எனக்கு மொறைப்பொண்ணுடா..!!”

“உன்னை விட அவ ரெண்டு வயசு மூத்தவடா..!!”

“அதுக்கு..???” நான் பட்டென கேட்க, அவன் திணறினான்.

“அ..அதுக்கு.. அதுக்கு.. அதானால அவளை நீ அக்கா மாதிரி நெனைக்கலாம்ல..?”

“அப்டிலாம் ஒரு மசுரும் என்னால நெனைக்க முடியாது.. வேற ஏதாவது இருந்தா சொல்லு..!!”

“அப்போ.. உண்மைலேயே அவளை லவ் பண்றியா..?”

“இல்லை.. ஊர் சுத்திட்டு.. அப்டியே உன் அக்காவை கழட்டி விட்ரலாம்னு இருக்கேன்..!! கேள்வியைப் பாரு.. சீரியஸா லவ் பண்றேண்டா..!! உன் அக்கா என்னை விட ரொம்ப சீரியஸ்..!! தெரியுமா..?”

“மச்சான்.. ப்ளீஸ்டா.. சொன்னா கேளுடா..!! இந்த மெட்ராஸ்ல எக்கச்சக்கமான பொண்ணுக இருக்காளுக..!! எவளாவது ஒருத்தியை கரெக்ட் பண்ணிக்கோ.. என் அக்காவ மட்டும் விட்ருடா ப்ளீஸ்..!!”

“ஏன்..?”

“எங்க வீட்ல அவளுக்கு நல்ல டீசண்டான மாப்ளையா பாக்குறாங்கடா..!!”

“ங்கொய்யால.. அப்டியே அப்பிருவேன்.. அப்போ நாங்க டீசன்ட் கெடயாதா..?”

“ச்சே.. நான் அப்டி சொல்லலடா..!! உங்க வீட்லயும் சரி.. எங்க வீட்லயும் சரி.. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஒத்துக்க மாட்டாங்கடா..!!”

“ஒத்துக்கலைன்னா.. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்குவோம்.. உனக்கு என்ன வந்துச்சு..?”

“அப்போ வேற வழியே இல்லையாடா..?” அவன் மிகவும் பரிதாபமாக கேட்டான்.

“வண்டியை எடுத்துட்டு மொதல்ல கெளம்பு.. அதான் ஒரே வழி..!! உன் அக்கா வர்ற நேரம் ஆயிடுச்சு.. அவ வர்றதுக்குள்ள உன்னை கெளப்பி விடுறேன்னு சொல்லிருக்கேன்.. உன்னை இப்போ இங்க பார்த்தான்னா.. அப்டியே டென்ஷன் ஆயிடுவா..!! கெளம்பு..!!”

“என்னடா இப்படி வெரட்டுற..? சின்ன வயசுல இருந்து எவ்ளோ பழகிருக்கோம்.. என்னை விட என் அக்காதான் உனக்கு முக்கியமா போயிட்டாளாடா..?”

அவன் கேட்க, நான் கொஞ்ச நேரம் அவன் முகத்தையே அமைதியாக பார்த்தேன். அப்புறம்
அவனுடைய தோளில் கை போட்டேன். சாந்தமான குரலில் சொன்னேன்.

“மாப்ள.. எனக்கு உன்னை பிடிக்கும்..!! நீ ரொம்ப நல்லவன்..!! ஆனா நான்.. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு.. குடும்பம் நடத்தி.. கொழந்தை பெத்துக்க முடியுமா..? சொல்லு..!! அதனால.. உன்னை விட உன் அக்காதான்டா எனக்கு ரொம்ப முக்கியம்..!!”

நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, எங்கள் முன்னால் அந்த ரெட் கலர் ஸ்கூட்டி பெப் வந்து நின்றது. வைஷூதான்..!! ஹெல்மட் கண்ணாடியை மேலே ஏற்றியவள், எடுத்ததுமே தன் தம்பியை ஏறிட்டு சீறினாள்.

“நீ என்னடா பண்ணிட்டு இருக்குற இங்க..? ஆபீஸ் போகலையா..?”

“இ..இல்லக்கா.. போனேன்…” சந்துரு ஒரு மாதிரி நடுங்கியபடி சொன்னான்.

“அப்புறம் என்ன இந்தப்பக்கம்..?”

“அது.. அது.. இவன்தான் அட்ரஸ் கண்டு பிடிக்க கஷ்டமா இருக்கும்னு என்னை கூட்டிட்டு வந்தான்..!!”

“ம்ம்ம்.. அட்ரஸ்தான் கண்டுபிடிச்சாச்சுல..? கெளம்ப வேண்டியதுதான..??”

“இ..இந்தா.. கெளம்புறேன்..!!”

“ம்ம்ம்..!!! வீட்ல போய் இதுலாம் சொல்லிட்டு இருக்காத.. புரியுதா..?” தன் தம்பியை எச்சரித்தவள், என்னிடம் திரும்பி சொன்னாள்.

“உக்காரு அசோக்..!!”

நான் சந்துருவை நக்கலாக பார்த்துக்கொண்டே, வண்டியின் பின்னால் அமர்ந்து கொண்டேன். ஒரு கையை அவளுடைய தோளிலும், ஒரு கையை அவளுடைய இடுப்பிலும் வைத்துக் கொண்டேன். சந்துரு என்னையே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது வைஷூ தன் தம்பியை பார்த்து கேட்டாள்.

“என்னடா.. அப்டியே பாவமா பாக்குற..?”

“அது ஒன்னும் இல்ல வைஷூ.. எனக்கு வேலை கெடைச்சதுல..? உன் தம்பிக்கு தண்ணி வாங்கித் தரணுமாம்..” நான் ரொம்ப கூலாக சந்துருவை அவன் அக்காவிடம் போட்டுக் கொடுத்தேன்.

“என்னது…?? தண்ணியா..?? தண்ணியடிக்கிறியா நீ..??” வைஷூ அவன் தம்பியை உக்கிரமாக முறைக்க,

“ஐயோ.. அதுலாம் ஒன்னுல்லக்கா.. அவன் சும்மா சொல்றான்..!!” அவன் பதறினான்.

“ம்ம்ம்ம்.. இந்த தண்ணியடிக்கிறது.. தம்மடிக்கிறதுலாம் உன்னோட வச்சுக்கோ.. அசோக்கை கெடுத்திடாத.. புரியுதா..?”

சொல்லிக்கொண்டே வைஷூ வண்டியை ஸ்டார்ட் செய்ய, சந்துரு வாய்க்குள் முணுமுணுத்தது எனக்கு தெளிவாக கேட்டது.

“ஆமாமாம்.. இவனை நான் கெடுக்குறனா.. இப்போதான வந்திருக்கான்.. இன்னும் கொஞ்ச நாள்ல பாரு.. மெட்ராசையே இவன் கெடுத்துடுவான்..”

அவன் முணுமுணுத்துக்கொண்டு இருக்கும்போதே, வைஷூ ஆக்சிலரேட்டரை முறுக்க, ஸ்கூட்டி சீறிக்கொண்டு பறந்தது. நான் இப்போது இரண்டு கையாளும் வைஷூவின் இடுப்பை வளைத்துக் கொண்டேன். அவளுடைய பின்னங்கழுத்தை மூக்கால் உரசினேன். சூடாக மூச்சு விட்டேன். அவள் மீதிருந்து, வியர்வையும் பெர்ஃப்யூமும் கலந்து அடித்த அந்த வாசனையை ஆழமாக நுகர்ந்தேன். ஆர்வத்தை அடக்க முடியாமல் அவளது தோள்ப்பட்டையில் ‘இச்ச்ச்..’ என்று என் இதழ்கள் பதித்தேன்.

“வாயை வச்சுக்கிட்டு சும்மா இருடா நாயி ..!!” தோளை நெளித்தபடி அவள் எரிச்சலாக சொல்ல,

“எங்கடி கூட்டிட்டு போற என்னை..?” அவள் காதோரமாய் நான் கேட்டேன்.

“ம்ம்ம்ம்.. உனக்கு வேலை வாங்கிக் கொடுத்த எனக்கு.. நீ ட்ரீட் கொடுக்கப்போற எடத்துக்கு..!!”

“அடச்சீய்.. அக்காவும் தம்பியும் ஒரே மாதிரி இருக்குறீங்கடி..!! உன் தம்பிக்கு வோட்கா புடிக்கும்.. உனக்கு என்ன.. விஸ்கியா ப்ராண்டியா..?”

“த்தூ.. கருமம்..!! ஏதாவது நல்ல ஹோட்டல் போலாம்.. சாப்பாடு வாங்கிக் கொடு..”

“சாப்பாடுதான..? வாங்கித்தர்றேன்..!! பில் மட்டும் நீ பே பண்ணிடு..!!”

“ஏன்..? நீ பண்ண மாட்டியா..?”

“கைல காசு இருந்தாத்தான பே பண்றதுக்கு..? ஊர்ல இருந்து கொண்டு வந்ததே நூறு ரூபா.. அதுலயும் இப்போ அம்பதுதான் மிச்சம் இருக்கு..!!”

“நூறு ரூபாயா..? அடப்பாவி… ஒத்தை நூறு ரூபாயை கைல புடிச்சுட்டு மெட்ராஸ்க்கு பொழப்பு தேடி வந்திருக்கியே.. உனக்குலாம் எவ்ளோ தைரியம்..?”

“ம்ம்ம்ம்… எல்லாம் நீயும் உன் தம்பியும் இருக்குற தைரியந்தான்..!!”

“ஓஹோ..? அப்போ நான்தான் இன்னைக்கு பலியாடா..?” அவள் சலிப்பாக சொன்னாள்.

“ஒய்.. என்ன.. ரொம்பதான் சலிச்சுக்குற..? எல்லாம் அக்கவுண்ட்ல வச்சுக்கம்மா.. அப்புறமா செட்டில் பண்ணிர்றேன்..!!”

“அக்கவுண்டா..? உனக்கு என்ன அக்கவுன்ட் இருக்கு.. எங்கிட்ட..!!”

1 comment on “வைஷு

உங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்