நினைத்தாலே இனிக்கும்

நான் ஆச்சரியபட்டேன். “எப்படி ஒரு வேளை நமக்கு முன் பஸ் ஏறிவிட்டாளா” நான் குழம்பிக்கொண்டே “மே ஐ கமின் மிஸ்” என்றேன். உடனே திரும்பினாள் மீண்டும் “லலல்லலா லல்லலல…லலலலல”ஒலித்தது.

அவள்”இதுதான் ஸ்கூலுக்கு வர நேரமா”என்றாள்.

“சாரி மேம் பஸ் லேட்”என்றேன்.

“எட்டரையில இருந்து பஸ் வரலையா”அவள் குரலில் கேலி தெரிந்தது.

நம்மை பார்த்திருக்கிறாள்.அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவள்”வெளியே நில்லு,ஒரு நாள் நிக்க வச்சா அடுத்த நாள் சீக்கிரம் வருவ”முகத்தில் அறைந்தாற் போல் கூறினாள். அவள் அப்படி சொல்வாள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.நிலைகுலைந்தேன்.”பூம்பொழில்.அடிப்பாவி உனக்காக தானடி எட்டரை மணியிலிருந்து நாயாக காத்திருக்கிறேன்.

அவள் கூறிவிட்டு விறுவிறுவென சென்றாள்.நான் இடிந்துபோய் நின்றேன்.நேற்று வரை உதட்டோரம் சிரித்து ஓரக்கண்ணால் பார்த்தவளா இவள்.இவளுக்காக தான் லேட்டாக வந்தோம் என்று இவருக்கு தெரிந்திருக்குமா,தெரியாதா.இது அவள் மனதில் இருந்து உதிர்த்த வார்த்தைகளா,இல்லை மாணவர்களுக்கு மத்தியில் கறாராக இருப்பது போல் நடிக்கிறாளா..?

நான் யோசித்துகொண்டிருக்கும் போதே மணி அடித்தது.தொடர்ந்து அவள் குரல்”ஸ்டூடண்ட்ஸ் நாளை வீக்லி டெஸ்ட்க்கு இன்னிக்கு நடத்துன போயம் நல்லா படிச்சிட்டு வந்தீடுங்க,அதில இருந்து எந்த கொஸ்டீன் வேணும்னாலும் நான் கேட்பேன்”என்று கூறிவிட்டு வெளியேறினாள். என்னை கவனிக்கவே இல்லை.

அதன் பிறகு இரண்டு முறை அவளை வராண்டாவிலும் ஒருமுறை கிரௌண்டிலும் பார்த்தேன் ஆனால் அவள் கவனிக்கவே இல்லை.
மாலை பெல் அடித்தது எறும்புகூட்டம் சிதறி ஓடுவது போல் மாணவர்கள் கலைந்து அவரவர் வீட்டிற்கு அம்மாவிடம் திட்டு வாங்க ஆர்வமாக சென்றனர்.வினோத் என்னை வெயிட் பண்ண சொன்னான் நான் பஸ் ஸ்டாப்பில் நிற்பாதாக கூறிவிட்டு வந்து ஒருமணி நேரம் ஆனது அவள் வரவேஇல்லை .பிறகு வினோத் வந்தான் “ஸாரிடா மாப்ள மேட்ஸ் ஸார்கிட்ட கொஞ்சம் டவுட் கேட்டுட்டு வர லேட்டாயிடுச்சி “என்றான்.
“அவ போயிட்டாளாடா”என்றேன் நான்.

“அவன்னா எவ…?.இங்க ஏகபட்ட அவ இருக்காளுங்க,ஏன் நம்ம கிளாஸ் மொக்க ஃபிகர் சரண்யா கூட அவ தான் நீ எவளடா கேக்குற”என்றான்.

“ஒதவாங்க போற உனக்கு எவன்னு தெரியாது”

“ஓ!நீ அவள கேக்குறீயா.அவ போயிட்டா”

“இப்போ நீ எவள சொல்ற”

“ப்ச்!ம்ம் நீ உன் ஆளதான கேக்குற”

“ம்…”

“அவளதான் சொல்றேன் அவ அப்பவே அந்த குந்தானி கூட அந்த ஓட்ட ஸ்கூட்டில ஏறி போயிட்டா”

“எப்போடா..?”

“நீ வெளியில வந்தில அப்பவே”

அப்பொழுதுதான் தெரிந்தது எனக்கு அவள் இவ்வளவு நாளாக அவள் ஸ்கூட்டியில் தான் சென்றிருக்கிறாள்.நாம்தான் அவள் வருவாள் வருவாள் என நினைத்து ஏமாந்திருக்கிறோம் “ச்சே என்ன ஒரு முட்டாள்தனம்”என என்னை நானே நொந்துகொண்டேன்.

பிறகு ஒரு நிமிடம் கூட தாமதிக்க வில்லை அடுத்த பஸ்ஸில் ஏறி இருவரும் சென்றோம்.

அவளை மறக்க முயன்றேன். அது முடியவில்லை.அவள் என்னை ஏமாற்றியும், ஏன்?என்று தெரியவில்லை ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு எனக்கு அவளை ஞாபகபடுத்தி கொண்டே இருந்தது.

வீட்டிற்கு வந்து என்னால் சும்மாக இருக்க முடிய வில்லை.அவள் ஞாபகமாகவே இருந்தது.அவளை மறக்க வேண்டும்,அதற்கு ஒரு வழிதான் உள்ளது முடிவு செய்தேன்.

நேராக ஒயின்ஷாப்புக்கு சென்றேன்.ஒரே ஒரு பியர்,அடிச்சிட்டு வந்துபார்த்தா அவ ஞாபகம் இன்னும் அதிகமாயிடிச்சி,அட இது என்னடா கொடுமை என்று நினைத்து கொண்டேன்.என் வேதனையை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல் இருந்தது எனக்கு அதற்கு சரியான ஆள் நம்ம வினோத் தான் என முடிவு செய்து எனது சைக்கிளை எடுத்துகொண்டு வினோத் வீட்டை நோக்கி சென்றேன்.

வினோத் வீட்டை அடைந்தேன்.என்னை தடுத்த காம்பௌண்ட் கேட்டை ஒரு கையால் தள்ளி விட்டு உள்ளே சென்றேன்.

“வினோத்.!வினோத்”என்று கூப்பிட்டேன்.

அவன் வெளியே எட்டி பார்த்து.”டேய் !வாடா உள்ள வா!”என்றான்.நான் சைகையால் தண்ணி அடிச்சிருக்கேன்,நீ வெளிய வாடா என்றேன்.என் நண்பன் என்னை புரிந்து கொண்டு வெளியே வந்தான்.இருவரும் சைக்கிளை எடுத்துகொண்டு வெளியே வந்தோம்.எப்பொழுதும் கூடிபேசும் இடமான பெரிய கோவில் அருகே இருக்கும் மண்டபத்தின் திட்டின் மீது அமர்ந்தோம்.

அவன் கேட்டான் “ஏன்டா திடீர்னு சரக்கு அடிச்ச அன்னிக்கு என்கிட்ட இனிமே சரக்கே அடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடுத்தே”என்று

“அவள நினைக்காம ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல மச்சி”

தலையில் அடித்துகொண்டான்”டேய்!நீ திருந்தவே மாட்டியா அவதான் உன்ன கண்டுக்கவே மாட்டேங்கிறா அப்புறம் ஏன்டா அவ முந்தானையே பிடிச்சிகிட்டு அலையிற. ”

“இல்லடா அவள மறக்க முடியலடா.எங்க பார்த்தாலும் அவ முகமாவே தெரியுது எனக்கு என்னாச்சினே தெரியலடா,ஆனா இந்த செகண்ட் ஒன்னு மட்டும் உண்மை டா அவ இல்லாம என்னால வாழவே முடியாதுன்னு நினைக்கிறேன்டா”என்றேன்.

“மச்சி!நீ ஒண்ண நல்லா புரிஞ்சிக்கோ அவ ஒண்ணும் நாலாவகுப்பு படிக்கிற பாப்பா இல்ல.நீ மிட்டாய் வாங்கி கொடுத்ததும் உன் பின்னாடியே வர,அவ நமக்கு டீச்சர் நீ என்னமோ இந்த வருஷம் 11TH பாஸாக மாட்டேன்னு நினைக்கிறேன்”

“நான் பாஸாகலன்னா கூட பரவாயில்லடா.நாளைக்கு போய் அவள பார்த்து ஏன் என் மேல உங்களுக்கு இவ்வளவு கோபம் னு “கேக்க போறேன்.

“மச்சி!நாளைக்கா அதுக்கு அவசியமே இல்ல.அதோ பாரு உன் ஆளு கோயிலுக்கு வந்துகிட்டு இருக்கா”என்றான்.

நான் திரும்பிபார்த்தேன்.அவளேதான் சிகப்பு கலர் காட்டன் சுடிதாரில் தலையில மல்லிகை பூவோடும் கையில் அர்ச்சனை தட்டோடும் ஒரு தேவதை போல் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

ஏற்கனவே போதையில் இருந்த நான் மேலும் போதையானேன்.

“ஏதோ கேக்கனும் னு சொன்னில்ல இப்ப போய் கேளு”என்றான்.

நான் அவனை பார்த்தேன்.அவளையும் பார்த்தேன்”எனக்கு என்னடா பயம் இப்ப போய் கேக்குறேன் பார்!”என சொல்லி அவளை நோக்கி சென்றேன்.

கோவிலில் அன்று அவ்வளவு கூட்டம் இல்லை.இரண்டு பிச்சைகாரர்கள் வலதுபுறமும் இடது புறமும் அமர்ந்திருந்தனர்.நான் இடதுபுறம் எனது செருப்பை அவழ்த்துவிட்டு உள்ளே சென்றேன்.இடதுபுறம் அமர்ந்திருந்த பிச்சைகாரன் என்னை நோக்கி தட்டை நீட்டினான்.அவனுக்கு பிச்சை போடும் எண்ணத்தை கை விட்டேன்,என்னவள் என்னை மீண்டும் ஏமாற்றி விட்டு வேறு வழியில் சென்றுவிடுவாள் என்ற பயத்தால் அவனை புறக்கணித்து விட்டு உள்ளே நடந்தேன்.அவள் வரவேற்பறையில் இருந்த பிள்ளையாரை கண்மூடி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தாள்.

அவள் அழகுக்கு இந்த உலகில் ஈடு இணையே இல்லை எனக்கு தோன்றியது அவள் மூக்கின் நுனியில் இருந்த வியர்வை துளி ரோஜாவின் இதழில் இருக்கும் பனிதுளி போல் இருந்தது.

நான் அவளையே பார்த்து கொண்டிருந்தேன்.பின் கண்களை திறந்தவள் என்னை பார்க்கவே இல்லை.அப்படியே திரும்பி நடந்தாள் நான் அவள் பின்புறத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தேன்.வினோத் என்னருகில் நின்றிருந்தான்.

“என்னடா ஏதோ கேக்கபோறேன் சொன்னே அப்படியே வெறிச்சி போய்நின்னுட்ட எதையோ பார்த்து பயந்துட்டியா”என்றான்.

எனக்கு பட்டென்று ஒரு யோசனை தோன்றியது.முதலில் வினோத்தை பேச சொல்லலாம்.பிறகு அவனை சாக்காக வைத்து நாம் பேசலாம்.

நான் வினோத்திடம் சொன்னேன்.அவன்”அய்யய்யோ என்னால முடியாது.ஆளவிடு சாமி”என்று நழுவ பார்த்தான்.

“டேய்,நீ இப்ப போய் பேசலனா நான் உன் கூட எப்பவும் பேசமாட்டேன்” என்றேன்.
இதை சொன்னால் போதும் வினோத் எனக்காக எதை வேண்டுமானாலும் செய்வான் என் நண்பன்.ஏன் என்றால் அவனுக்கு என்னை அவ்வளவு பிடிக்கும்.
அவனும் நானும் அவள் பின்னாலே சென்றோம்.நாங்களும் அவள் ஒருமுறையாவது திரும்புவாள் என நினைத்து நினைத்து ஏமாந்ததுதான் மிச்சம்.அவள் திரும்பவே இல்லை அவள் கர்ப்பகிருகத்திற்கு உள்ளே சென்றாள்.நாங்களும் சென்றோம் அவள் அர்ச்சனை தட்டை ஐயரிடம் கொடுத்து கண்மூடி நின்றாள்.நாங்கள் அவள் முன்பு சென்று நின்றோம்.அவள் கண்களை திறந்தாள் எங்களை பார்க்கவேண்டும் என்பதற்காக.அவள் கண்களை திறந்து எங்களை பார்க்கவில்லை.திரும்பி சாமியை பார்த்து கன்னத்தில் தப்பு போட்டுகொண்டாள்.

அவள் எங்களை பார்த்தாளா இல்லை வேண்டுமென்றே நடிக்கிறாளா என்றே தெரியவில்லை.திரும்பி வந்த ஐயரிடம் அர்ச்சனை தட்டை வாங்கி கொண்டு திரும்பிபார்க்காமல் நடந்த அவள் மேல் எனக்கு கோபம்கோபமாய் வந்தது.

ஏன் இந்த மாற்றம்,இவளுக்கு என்னாயிற்று ஏன் என்னை வெறுக்கிறாள்.அதற்கு மேல் என்னால் அவள் பின்னால் செல்ல விருப்பம் இல்லை.வினோத்திடம் “வாடா போலாம்”என்றேன்.

நாங்கள் புறப்பட ஆயத்தமான போது சட்டென அவள் திரும்பினாள்.எங்களை நோக்கி வந்தாள்.”நீ வினோத் தானே 11D “என்று வினோத்தை பார்த்து கேட்டாள்.நன்றாக கவனியுங்கள் வினோத்தை பார்த்து என்னை அவள் பார்க்கவே இல்லை.எனக்கே ஒரு சந்தேகம் நாம் அவள் கண்ணுக்கு தெரிகிறோமா என்று ஒரு ஒப்புக்கு கூட என்பக்கம் அவள் திரும்ப வில்லை.

வினோத் “ஆமா டீச்சர் உங்ககிட்ட பேசத்தான் நாங்கள் வந்தோம் ஆனால் நீங்கள் அப்ப பார்க்கவே இல்ல.”என்றான்.

“ஸாரிப்பா நான் சரியாக கவனிக்க வில்லை.உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று யோசித்து கொண்டே இருந்தேன் அப்புறம் தான் ஞாபகம் வந்தது”என்றாள்.
.
“இட்ஸ் ஓகே மிஸ்”என்றான்.அவள் என்னை பார்ப்பாள் ஏதாவது கேட்பாள் என்று நினைத்தேன் ஆனால் அவள் கண்டுகொள்ளவே இல்லை.நான் வினோத்திடம் “டேய் நான் கிளம்பறேன் நீ வரியா இல்லையா”என கேட்டேன்.

இப்பொழுதுதான் அவள் என்னை பார்த்தாள் கேவலமான பார்வை.வாசலில் இருந்த பிச்சைகாரனை நான் பார்த்தது போல்,தெருவில் குப்பையை மேயும் நாயை பார்ப்பது போல் “இவன் யாரு உன் ஃபிரண்டா நம்ம ஸ்கூல்லயா படிக்கிறான்”என்றாள்.

நான் அதிர வில்லை இதை அவள் கேட்பாள் என்று எனக்கு தெரியும்.அதற்கு முன் போய்விடலாம் என நினைத்தேன்.ஆனால் கேட்டுவிட்டாள் என் என்பது ரூபாய் வேலை செய்ய ஆரம்பித்தது. நான் கோபமாக அவளை பார்த்து கேட்டேன்.”உங்களுக்கு என்னை நிச்சயமாய் தெரியாது..?”என்று கேட்டேன்.

அவள் “தெரியாததால் தான் கேட்டேன்” என்றாள்.உடனே நான்”நேற்று காலை பஸ்ஸில் உங்களை உரசிகொண்டு வந்தேனே அவன் நான்தான்.என் பெயர் ஜெய்.உங்களுக்கு என்னை தெரியும் ஆனால் நீங்க நடிக்கிறீங்க.டேய் !நான் போறேன் நீ வந்தா வா இல்லனா போ” என கூறிவிட்டு விறு விறு வென நடந்தேன்.

To Be Continue NEXT PAGE

2 comments on “நினைத்தாலே இனிக்கும்

உங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்