மலரே என்னிடம் மயங்காதே – 2

“எப்படி நெனைக்காம இருக்க சொல்ற..? உனக்கு தெரியாது பன்னீர்.. நான் அவ மேல..”

“எல்லாம் எனக்கு தெரியும் அசோக்கு..!! ஆனா.. அவளே போனப்புறம்.. இன்னும் அவளையே நெனச்சுக்கிட்டு.. நீ உன் வாழ்க்கையை பாழாக்கிக்கிறது சரி கிடையாது..!!”

“என்ன பண்ண சொல்ற என்னை நீ..?”

“நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ.. அதுதான் சரி.. இன்னொரு பொண்ணு வந்தாதான்.. உன் பொண்டாட்டி நெனைப்பு உன்னை விட்டு போகும்..!!”

“ஹாஹா..!! உனக்கு இன்னும் புரியலை பன்னீர்..!! கயலை தவிர வேற எந்த பொண்ணோட நெனைப்பும் எனக்கு தேவையில்லை..!! அவ எடத்துல வேறொருத்தியை வச்சு பாக்க.. சத்தியமா என்னால முடியாது..!! வேற ஏதாவது யோசனை இருந்தா சொல்லு..!!”

அவர் அவ்வளவு சொல்லியும் நான் பிடிவாதமாக இருக்க, பன்னீர் டென்ஷன் ஆனார். குரலை உயர்த்தி கத்தினார்.

“டேய்.. ஏண்டா இப்படி இருக்குற..? சொல்றது புரியலையா உனக்கு..??”

“எதுக்கு இப்போ கத்துற..?”

“பின்ன என்ன..? அவன் அவன் பொண்டாட்டி உசுரோட இருக்குறப்போவே நாலஞ்சு வச்சுக்கிட்டு சுத்துறானுக.. உனக்கு என்ன வந்தது..?”

“எவன் வேணா எப்படி வேணா இருந்துட்டு போகட்டும்.. என்னையும் அப்படி இருக்க சொல்லாத..!!”

“அப்போ நான் சொல்றதை கேக்க மாட்ட..? என் வார்த்தைக்கு அவ்ளோதான் மதிப்பு..??”
பன்னீர் அப்படி கோபமாக கேட்டதும், நான் பட்டென்று அமைதியானேன். அவருடைய கண்களையே கொஞ்ச நேரம் கூர்மையாக பார்த்தேன். அப்புறம் என் குரலை இலகுவாக்கிக் கொண்டு, சற்றே கேலியான குரலில் கேட்டேன்.

“சரி.. நான் ஒரு கேள்வி கேக்குறேன்..!! அதுக்கு நீ பதில் சொல்றியா..?”

“என்ன..?” அவர் டென்ஷன் குறையாமலே கேட்டார்.

“உனக்கும் சின்ன வயசுலேயே.. உன் பொண்டாட்டி உன்னை விட்டு போயிட்டாங்கள்ல..? நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல..?”

அவ்வளவுதான்..!! பன்னீர் அந்த கேள்வியை சற்றும் எதிர் பார்த்திருக்க மாட்டார் என்று தோன்றியது. அதிர்ந்து போனார். விழிகளை விரித்து ஒரு மாதிரி வித்தியாசமாக பார்த்தார். தடுமாற்றமான குரலில்..

“அ..அது.. அது…” திணறினார்.

“ம்ம்ம்.. சொல்லு..”

“இங்க பாரு அசோக்கு.. அத வேற.. இது வேற..”

“என்ன வேற வேற..??”

“என் பொண்டாட்டி என்னை விட்டு போறப்போ.. நான் ரெண்டு கொழந்தைக்கு அப்பா..”

“இருந்தா என்ன..? அப்போ உனக்கும் என் வயசுதான இருக்கும்..? நீ நெனச்சிருந்தா.. இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிருந்திருக்கலாம்ல..? உனக்கு என்ன பொண்ணா கெடைச்சிருக்காது..? ஏன் பண்ணிக்கலை..?”

“இன்னொரு கல்யாணம் பத்திலாம் நான் நெனச்சு பாத்தது இல்ல அசோக்கு.. அதுக்கு காரணம்லாம் இல்ல..”

“காரணம் இருக்கு பன்னீர்.. எனக்கு தெரியும்..!!”

“என்ன..?”

“என்னை மாதிரி.. உனக்கும் உன் பொண்டாட்டி மேல அவ்ளோ பாசம்.. அவங்க நெனைப்பு இப்போவும் உன் மனசுல இருக்குறது எனக்கு தெரியும்..!!”

“அ..அசோக்கு .. நான் சொல்ல வர்றதை..”

“உனக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா பன்னீர்..??”

நான் ஆணித்தரமாக கேட்க அவர் சோர்ந்து போனார். என் வார்த்தைகளில் இருந்த உண்மை அவருடைய மனசாட்சியை சுட்டிருக்கும். அவரால் பேச முடியவில்லை. ஒரு மாதிரி பரிதாபமாக என்னையே பார்த்தார். இறந்து போன அவர் மனைவியின் நினைவை, நான் இப்போது கிளறி விட்டுவிட்டேன் என்று தோன்றியது. அந்த நினைவில்தான் இப்போது தத்தளிக்கிறார் என்று எனக்கு புரிந்தது. இப்போது நான் அவருக்கு ஆறுதலான குரலில் சொன்னேன்.

“பன்னீர்.. நான் உன்னை கஷ்டப்படுத்தனும்னு அப்படி சொல்லல.. நீ என்னை புரிஞ்சுக்கணும்னுதான் சொன்னேன்..”

“பரவால வுடு..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்… என் வாழ்க்கைதான் எப்படியோ போயிடுச்சு.. உன் வாழ்க்கை இப்படி சந்தோஷம் இல்லாம இருக்குறது எனக்கு புடிக்கலை அசோக்கு.. அதான் அப்படிலாம் பேசிப்புட்டேன்..!! என்னை மன்னிச்சுடு..!!”

Screw Driver

காதல் கொஞ்சம்.. காமம் கொஞ்சம்..

You may also like...

Leave a Reply