12வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை நீதிமன்ற வளாகத்தில் வெளுத்த வழக்கறிஞர்கள்!

lawyers assaulted the convicts who raped the 11 years old girl in Chennai

சென்னையைச் சேர்ந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நீதிமன்ற வளாகத்தில் வைத்து சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான 11 வயது சிறுமி ஆறு மாத காலமாக 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், அனைவரும் இன்று சென்னை உயர் நீதிமன்றத்திலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் அனைவரையும் ஜூலை 31-ம் தேதி சிறையில் அடைக்க நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களை முதல்மாடியிலுள்ள நீதிமன்ற அறையிலிருந்து வெளியில் போலீஸார் அழைத்துவந்தனர். அப்போது, மாடிப்படியில் ஏறிய 10-க்கும் மேற்பட்டவர்கள், 17 பேர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பின்னர், அவர்களிடமிருந்து காவல்துறையினர் மீட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் வழக்கறிஞர்கள் என்று கூறப்படுகிறது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அனைவரும் இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Source : vikatan.com / Nakkheeran