ப்ரேக்கிங் பாய்ன்ட்

breaking point Tamil Crime Sex Story

எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை.. என்னுடைய ஆசைக்காக எழுதுகிறேன்..!! சமீபத்தில் ஒரு நண்பர்.. க்ரைமுடன் செக்ஸ் கலந்து எழுத சொன்னார்.. இன்னொரு நண்பர்.. கணவன் மனைவி உறவு பற்றி எழுத சொன்னார்..!! இந்த மூன்று விஷயங்களையும் இணைத்து யோசித்தபோது தோன்றிய கதைதான் இது..!! பிரேக்கிங் பாயின்ட்..!!

‘எல்லா மனிதனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயின்ட் உண்டு..!!’ என்று குருதிப்புனலில் நாஸர் சொல்வார். இந்தக்கதைக்கு பொருத்தமாக இருந்ததால்.. அங்கிருந்து உருவிக் கொண்டேன்.!! கதை நன்றாக வளர்ந்து வருகிறது. என்னுடைய சிறந்த படைப்புகளில் ஒன்றாக இந்த கதையை கருதுகிறேன். உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்..!! நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர்

Tamil Crime Sex Story

நான்: அசோக்

வானம் சல்லடையாய் மாறிவிட்டது போல, மழை வெளியே ‘ச்ச்ச்சோ’வென கொட்டிக்கொண்டிருந்தது. ‘பளிச் பளிச்’ என மின்னல் ஒளியும், ‘திடும் திடும்’ என இடி ஒலியும் சீரான நேர இடைவெளியில், விட்டு விட்டு வந்து கொண்டிருந்தன. காற்றும் பலமாக வீசியது. அடித்த காற்றில் ஜன்னல் கதவுகள் படபடவென அடித்துக்கொள்ள, நான் சென்று ஜன்னலை சாத்தி கொக்கியிட்டேன். மணிக்கட்டை ஒருமுறை திருப்பி மணி பார்த்துக் கொண்டேன். மீண்டும் டேபிளுக்கு வந்து, பாதியில் விட்ட வேலையை தொடர்ந்தேன்.

ஒரு இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே, அகல்யா பாத்ரூம் கதவு திறந்து வெளியே வந்தாள். உடலில் ஒற்றை டவலை மட்டும் சுற்றியிருந்தாள். ஈரம் சொட்டும் அந்த உடையில், இன்னும் அழகாக தெரிந்தாள்.. இருமடங்கு செக்ஸியாக காட்சியளித்தாள்..!! புன்னகையுடன் வெளியே வந்தவள், அவளது புடவையை நான் அயர்ன் செய்து கொண்டிருப்பதை பார்த்ததும் பதறிப் போனாள்.

“ஐயோ.. என்னப்பா நீ..? இந்த வேலைலாம் போய்.. நீ பாத்துக்கிட்டு..??”

“ஏன்… பாத்தா என்ன…? வேலை இல்லாம.. வீட்ல சும்மா வெட்டியாத்தான இருக்குறேன்..?”

“ப்ச்.. அதுக்காக..? பொண்டாட்டி பொடவையை அயர்ன் பண்ணனுமா..? கொண்டா..”

“இதுல என்ன இருக்கு..? நான் வேலைக்கு போறப்போ.. எத்தனை நாள் நீ என் ட்ரெஸ்லாம் அயர்ன் பண்ணி கொடுத்திருப்ப..? ஒரு நாள் என் பொண்டாட்டிக்காக இந்த வேலைலாம் நான் பண்ண கூடாதா..?”

நான் அமைதியாக சொல்ல, அகல்யா இப்போது என்னை காதலாக பார்த்தாள். என் அருகில் வந்து என் கன்னத்தை ஒரு கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். பின்பு குரலில் ஒருவித குறும்பையும், போதையையும் குழைத்தபடி சொன்னாள்.

“பொண்டாட்டிதான் இந்த வேலைலாம் பண்ணனும்.. புருஷன் பண்ண கூடாது..!!”

“நான் பண்ணுவேன்..!!”

“பண்ணக்கூடாது..!!!!!” அவள் கோபமாக சொல்ல,

“பண்ணுவேன்..!!!!!!” நான் உறுதியாக சொன்னேன்.

“உன்னை….” என்று அவள் பல்லை கடித்தாள்.

“என்ன பண்ணப் போற..?”

“ம்ம்ம்ம்.. அப்டியே கிஸ் அடிக்கப் போறேன்…!!”

எதோ அடித்து உதைக்கப் போகிறவள் மாதிரி அப்படி சொன்னவள், சற்றும் தாமதியாமல் சொன்னதை செயல் படுத்தினாள். அவளது கைகளை என் கழுத்தில் மாலையாக போட்டுக் கொண்டு, அவளது மார்புத் திரட்சியால் என் நெஞ்சை கூர்மையாக குத்திக் கொண்டு, என் உதடுகளை கவ்வியிருந்தாள். கண்களை செருகிக்கொண்டு, காதலாக முத்தமிட்டாள். கொஞ்ச நேரம் அந்த மாதிரி ஆசையாக என் உதடுகளை உறிஞ்சியவள், பின்னர் அவளுடைய உதடுகளை விலக்கியவாறே சொன்னாள்.

“வேலை போச்சுன்னு ரொம்பலாம் ஃபீல் பண்ணாத அசோக்.. இப்போதான் நான் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்ல..? எல்லாம் நான் பாத்துக்குறேன்..!! நீ கொஞ்ச நாள் எதைப் பத்தியும் நெனைக்காம.. நிம்மதியா இரு.. கூடிய சீக்கிரம் உனக்கும் நல்ல வேலை கெடைக்கும்.. சரியா..?”

“ம்ம்.. சரிடி..”

“சரிப்பா.. ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வர்றேன்.. நீ வெளில இரு..!!”

“ஏன்..? என் முன்னாடி பண்ணகூடாதா..?”

“ச்சீய்.. எனக்கு வெக்கமா இருக்கும்..!!” அகல்யா அழகாக வெட்கப்பட்டாள்.

“கட்டுன புருஷன்ட்ட என்ன வெக்கம்..?”

“ம்ம்ம்.. அது அப்படித்தான்.. வெளில போ..!!”

“ம்ஹூம்.. மாட்டேன்..!!”

“ப்ச்.. போன்னு சொல்றேன்ல.. போ..!!”

அவள் என் கையை பிடித்து இழுத்து, அறைக்கு வெளியே தள்ளினாள். நான் திரும்பி தலையை குனிந்து, அவள் முகத்தை கூர்மையாக பார்த்தேன். அவள் அதன் அர்த்தம் புரியாமல் கேட்டாள்.

“ஏன் அப்டி பாக்குற..?”

“இல்ல.. நைட்டுலாம் இல்லாத வெக்கம்.. பகல்ல மட்டும் எங்க இருந்து வருதுன்னு பாக்குறேன்..!!” சொல்லிவிட்டு நான் கண்ணடிக்க,

“ச்சீய்…!!!!!!!!!”

அகல்யா வெட்கத்துடன் சொன்னவாறே என்னை வெளியே தள்ளினாள். கதவை சாத்திக் கொண்டாள். அவ்வளவுதான்..!! அவ்வளவு நேரம் சிரிப்பும், மலர்ச்சியுமாய் இருந்த என் முகம் பட்டென மாறியது. ஒரு வித சீரியஸ்னஸ் வந்து குடிகொண்டது. இன்ஸ்டன்டாய் சுறுசுறுப்பானேன். அடுத்த ரூமுக்கு சென்று.. பீரோ திறந்து.. என் வாட்ச், மோதிரம், செயின், பாக்கெட்டில் இருந்த தேவையான, தேவையற்ற காகிதங்கள் எல்லாம் அள்ளி உள்ளே போட்டு மூடினேன். சில நூறு ரூபாய்கள் எடுத்து பர்ஸில் வைத்துக் கொண்டேன். பர்ஸை பின்புற பேன்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டேன். அலமாரி சென்று தூக்க மாத்திரைப் பட்டை தேடி, நான்கைந்தை பிய்த்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். ஹேங்கரில் தொங்கிய ரெயின் கோட் எடுத்து அணிந்து கொண்டேன்.

சேரை நகர்த்திப் போட்டு ஏறி, மேலே கை விட்டு, ஸ்லாபில் இருந்து அந்த காட்டன் பாக்ஸை எடுத்தேன். நேற்று பாண்டிபஜாரில் ரோட்டோர கடையில் வாங்கிய அந்த புது ஷூவை, அந்த பாக்ஸில் இருந்து எடுத்தேன். அவசரமாக அணிந்து கொண்டேன். பின்பு, அகல்யா இருந்த அறையை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு, அந்த காட்டன் பாக்சுக்குள் கைவிட்டு அந்த கத்தியை எடுத்தேன். அரையடிக்கு சற்று அதிகமான நீளத்தில், பளபளவென்று கூர்மையாக மின்னியது. இதுவும் நேற்று பாண்டி பஜாரில் வாங்கிய ஐட்டம்தான். உடலில் பாய்ந்து.. உயிரை பறிக்கும்.. உலோக எமன்..!! கத்தியை உறைக்குள் போட்டு, காலுக்கு பக்கவாட்டில் சாக்சுக்குள் செருகினேன்.

“என்னப்பா.. வெளில கெளம்பிட்டியா..?” திடீரென அகல்யாவின் குரல் கேட்டு நான் சற்று அதிர்ந்து போனேன்.

“ஆ..ஆமாண்டா ..!!” என்றேன் சமாளித்தவாறு.

“இன்டர்வியூவா..?”

“இல்லை.. என் ஃப்ரண்ட் அன்பு இருக்கான்ல.. அவனை பாக்க போறேன்..!!”

“ஓஹோ..? எப்போ வருவ..?”

“நைட்டு ஆயிடும்னு நெனைக்கிறேன்..!!”

“சரிப்பா.. பத்திரமா போயிட்டு வா..!!”

கனிவுடன் சொன்ன என் மனைவியையே நான் கொஞ்ச நேரம் காதலாக பார்த்தேன். அப்புறம் பட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டேன். அவளது நெற்றியில் ஈரமாக முத்தமிட்டேன். என் கண்களில் ஒரு துளி நீர் துளிர்த்தது. அதை அவளுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டேன். அவளுடைய காதோரமாக மெல்லிய குரலில் சொன்னேன்.

“ஐ லவ் யூ டி அம்மூ..!!”

“ஐ லவ் யூ ப்பா..!!”

வீட்டை விட்டு வெளியே வந்தேன். மழையில் அதிகம் நனைந்து விடாமலே, ஆட்டோ ஒன்று கிடைத்தது. அன்புவின் வீடு மதுரவாயலில் இருக்கிறது. வளசரவாக்கம் வாட்டர் டேங்கில் இருந்து கிளம்பிய ஆட்டோ, ஆலப்பாக்கம் வழியாக மதுரவாயலை அடைய கால் மணி நேரம் பிடித்தது. அன்பு எனக்காக காரில் காத்திருந்தான். ஆட்டோவில் இருந்து அவனுடைய காருக்கு மாறினேன். அன்பு காரை ஓட்டினான். மழையில் மெல்ல ஊர்ந்துகொண்டிருந்த காரை, மதுரவாயல் ஃப்ளை ஓவர் ஏறி, பூந்தமல்லி சாலையில் செலுத்தியதும் விரட்டினான். வேலப்பன் சாவடியை நெருங்கும்போது..

“ட்ரிங்க்ஸ் சாப்பிடனும் போல இருக்குடா அன்பு..!! சாப்பிடலாமா..?” என்றேன் நான்.

“ஹாஹா.. தண்ணியடிக்கிறதுக்கு நான் என்னைக்கு நோ சொல்லிருக்கேன்.. போலாம்..!!”

அவன் நோ சொல்லமாட்டான் என்று எனக்கு நன்றாக தெரியும். அன்பு ட்ரிங்க்ஸ் சாப்பிடுவது எனது திட்டத்தின் மிக முக்கியமான எலிமன்ட்..!!! பூந்தமல்லிக்குள் என்டர் ஆகும் முன்பே, ஹைவேயில் காட்சியளித்த அந்த பாருக்குள் நுழைந்தோம். நான் ஒரு பீர் மட்டும் வாங்கிக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாய் சிப்பினேன். அன்பு விஸ்கி வாங்கி தொண்டைக்குள் சரித்துக் கொண்டான். நான் குடிப்பது முக்கியமல்ல.. அவன் நன்றாக குடிக்க வேண்டும்..!! இரண்டாவது ரவுண்டு முடிந்தபோது, அவனிடம் இருந்து வார்த்தைகள் குழறலாய் வெளிப்பட்டன.

“பூ…பூந்தமல்லில சைக்யாட்ரி சி..சிம்போஸியம் நடக்குறது.. நீ சொல்லி எனக்கு தெரியுது பாரு..”

“ந்யூஸ் பேப்பர்ல பாத்தேன்.. நீ அட்டன்ட் பண்ண ஆசைப்படுவேன்னு தோனுச்சு.. அதான் சொன்னேன்..”

“தேங்க்ஸ் அசோக்.. ஆனா.. எனக்கு ரொம்பலாம் இ..இன்ட்ரஸ்ட் இல்லடா..!!”

“இன்ட்ரஸ்ட் இல்லையா..? அப்புறம் எதுக்கு வந்த..?”

“சும்மா.. உன்கூட கொஞ்சம் வெளில சுத்தலாமேன்னு..!! வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கெடக்க ரொம்ப போரடிக்குதுடா..!!”

சொல்லிவிட்டு அவன் சோகமாக தலையை கவிழ்த்துக் கொண்டான். அவனுடைய சோகத்தின் அர்த்தம் எனக்கு புரியும். நான் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தேன். பின்பு அவனே மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

“டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணி.. அவ மூஞ்சில விட்டெறிஞ்சிட்டேன்..!!”

“ஓ.. எப்போ..?”

“ரெண்டு நாளாச்சு..!! இனிமேயும் அவ திருந்துவான்னு எனக்கு நம்பிக்கை இல்ல.. போய்த்தொலைன்னு விட்டுட்டேன்..!!”

“ம்ம்.. குட்.. அதுவும் நல்லதுக்குத்தான்..!! ஆனா.. அதையே நெனச்சுட்டு இருக்காத அன்பு.. வேற ஏதாவது…”

To Be Continue NEXT PAGE | இந்த கதை பிடித்திருந்தால் உங்கள் நண்பருக்கு வாட்ஸ் அப் Share செய்யவும் மறக்காமல்

Screw Driver

காதல் கொஞ்சம்.. காமம் கொஞ்சம்..

You may also like...

Leave a Reply