மலரே என்னிடம் மயங்காதே

சற்றே எமோஷனலாக ஒரு காதலை சொல்ல திட்டமிட்டிருக்கிறேன். அதை தவிர இந்தக்கதையை பற்றி எதையும் சொல்ல நான் விரும்பவில்லை. காரணம்.. மேலும் தகவல்கள் சொன்னால்.. உங்களுடைய வாசிப்பு அனுபவம் கெட்டு விட கூடிய வாய்ப்பிருக்கிறது..!! குட்டி குட்டியாக ஐந்தாறு எபிசோட்கள் வருமாறு எழுத நினைத்திருக்கிறேன்..!! வழக்கம் போல உங்கள் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன்..!! நன்றி..!!

எபிஸோட் – I

குடையை குண்டூசியால் குத்தி சல்லடையிட்டது மாதிரி, இருள் வானெங்கும் எண்ணிடலங்கா நட்சத்திர ஓட்டைகள்..!! சாலை விளக்குகள் மஞ்சள் நிறத்தில் மந்தமான வெளிச்சத்தை துப்பி, இரவின் இருள் போக்க இயன்ற அளவு முயற்சித்துக் கொண்டிருந்தன. குரைத்த நாயை கண்டுகொள்ளாமல், குறுகலான அந்த சாலைக்குள் நான் காரை திருப்பினேன். குண்டும் குழியுமாய் இருந்த சாலையில் நிதானமாகவே காரை செலுத்தினேன். நாங்கள் குடியிருக்கும் வீட்டை நெருங்கியதும் காரின் வேகத்தை சுத்தமாக குறைத்தேன். கேட்டுக்கு வெளியிலேயே காரை நிறுத்தி பார்க் செய்தேன். அலறிக்கொண்டிருந்த ஹிமேஷ் ரேஷம்மயாவை ஆஃப் செய்தேன். சாவி திருகி, இன்ஜினை சாந்தமாக்கினேன்.

கேட் திறந்து உள்ளே சென்று.. கயல்விழியை நான் கட்டிப் பிடித்து கொஞ்சுவதற்கு முன்பு.. என்னை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். நான்.. அசோக்..!! இயந்திரவியலில் இளநிலை பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவன். ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களை, உற்பத்தியும் ஏற்றுமதியும் செய்யும் ஒரு நிறுவனத்தில் உத்தியோகம். உற்பத்தி பிரிவு ஒன்றுக்கு மேலாளராக இருக்கிறேன். சற்றே கடினமான வேலைதான்..!! மாதாமாதம் முதல் தேதி ஆனதும், எனது வங்கிக்கணக்கு ஐம்பதாயிரத்து சொச்சம் அதிகமாக காட்டும்.

மேலே நான் கொஞ்சப் போவதாக சொன்ன கயல்விழி, என் மனைவி..!! ஓராண்டுக்கு முன்புதான் எங்களுக்கு மணமானது..!! மாங்கல்யத்தை அவளுடைய கழுத்தில் பூட்டி.. என்னை அவளுடைய பதியாகவும்.. அவளை என்னில் பாதியாகவும்.. மாற்றிக்கொண்டேன்..!! இருவருக்கும் மணமாகிய இந்த ஒரு வருட காலத்தில், எங்கள் இருவருடைய மனமும்.. இப்போது ஒன்று கலந்து ஒரு மனமாகி போயிருந்தது..!! இல்லற வாழ்க்கை உமிழ்ந்த இன்பத்தில்.. நானும் கயலும் நனைந்து.. திளைத்துப்போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..!! எங்கள் இருவருக்கும் இடையிலான அன்னியோன்யம்.. மிக மிக அலாதியானது..!! சரி.. வாருங்கள்.. கயலை பார்க்கலாம்..!!

கேட் திறந்து கதவை நெருங்கியவன், காலிங் பெல்லை அழுத்த கையை நகர்த்தினேன். அப்போதுதான் ‘விஷ்ஷ்… விஷ்ஷ்… விஷ்ஷ்…’ என்ற சப்தத்துடன் எனது செல்போன் வைப்ரேட் ஆனது. பாக்கெட்டுக்குள் கிடந்து பதறி துடித்தது. காலிங் பெல் அழுத்தும் முன்பு, ‘கால் செய்வது யார்’ என பார்த்துவிடலாம் என்று எனக்கு தோன்ற.. செல்போனை வெளியே எடுத்தேன்..!! கயல்தான் கால் செய்கிறாள். வீட்டுக்குள்தான் இருக்கிறாள். காரில் வந்து நான் இறங்கியதை கவனிக்கவில்லை போலும் அவள்..!! சின்னதாக அவளிடம் விளையாடலாம் என்று நினைத்தவாறே, கால் பிக்கப் செய்தேன்.

“ஹலோ..!!” என்றேன்.

“அப்பாவும், தங்கச்சியும் கெளம்பிட்டாங்கப்பா..!!” என்றாள் எடுத்ததுமே அடுத்த முனையில் அவள்.

“ம்ம்.. எத்தனை மணிக்கு ட்ரெயின்..??”

“எட்டு மணிக்கு..!!”

“காலைல முகூர்த்தத்துக்கு சரியா போய் சேர்ந்திடுவாங்களா..?”

“ம்ம்.. அதுலாம் போயிருவாங்க.. ஆறு மணிக்குலாம் ட்ரெயின் அங்க ரீச் ஆயிடும்..!!”

“ஆறு மணிக்குலாம் போயிடுமா..? அப்போ கரெக்டா இருக்கும்..!!”

“ம்ம்ம்.. அது சரி… நீ எப்போ ஆபீஸ்ல இருந்து கெளம்புற..?”

“அ..அது.. இன்னும் ஒரு.. ரெண்டு மணி நேரம் ஆகும்மா..” நான் சற்றே கேஷுவலாக பொய் சொன்னேன்.

“இன்னும் ரெண்டு மணி நேரமா..? அப்போ.. வீட்டுக்கு வர்றதுக்கு பத்தாயிடுமா..??” அவள் சலிப்பாக கேட்டாள்.

“பத்தரை கூட ஆயிடும்..!!”

“ப்ச்.. போடா..!! எருமை மாடு..!! கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பே இல்ல..!! சரியான…. ஜடம்..!!”

“ஒய்.. இப்போ எதுக்கு திட்டுற..?”

“பின்ன என்ன..? புள்ளத்தாச்சி பொண்டாட்டி ஒருத்தி.. வீட்டுல தனியா இருக்காளே.. காலாகாலத்துல வீட்டுக்கு போய்.. அவளை கட்டிப் புடிச்சு கொஞ்சலாமேனு.. கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு..?? எப்போ பாரு.. வேலை.. வேலை.. வேலை..!! உனக்குலாம் எதுக்கு பொண்டாட்டி..? உன் கம்பெனில இருக்குற கட்டிங் மெசினையோ.. வெல்டிங் மெசினையோ கல்யாணம் பண்ணி தொலைச்சிருக்க வேண்டியதுதான..? நீயும் அதை காலம் பூரா கட்டிக்கிட்டு அழுதிருக்கலாம்.. நானும் நிம்மதியா இருந்திருப்பேன்..!!”

“ம்ம்ம்.. ஐடியா நல்லாத்தான் இருக்கு.. இந்த யோசனை எனக்கு முன்னாடியே இல்லாம போச்சே..? சரி பரவால.. இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகலை… உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு.. வெல்டிங் மெசினோட எனக்கு வெடிங்..!! எப்பூடி..???”

“ம்ம்ம்ம்… வெளக்கமாரு..!!!!!”

“ஹ்ஹ்ஹஹாஹ்ஹ்ஹஹா…!!”

“சிரிக்காதடா.. நான் செம கடுப்புல இருக்கேன்..” அவள் சிணுங்கலாக சொன்னாள்.

“சிரிப்பு வருதே செல்லம்.. என்ன பண்ண சொல்ற என்னை..? ஹ்ஹஹா…!!”

“சிரி சிரி.. நல்லா சிரி.. இன்னும் பத்து நாளைக்கு உனக்கு ஒன்னும் கெடயாது மவனே..!! ‘ஒன்னே ஒன்னுடி.. ஒன்னே ஒன்னுடி’னு.. ஒதட்டை பிதுக்கிட்டு வருவேல.. ஓங்கி ஒன்னு போடுறேன் இரு..”

“ஹேய்.. இதுலாம் அநியாயம்டி..!! அக்கிரமம்.. அராஜகம்..!!”

“நீ பண்றது மட்டும் நியாயமா..? பொண்டாட்டியை விட.. போல்ட், நட்டு கணக்கு பாக்குறதுதான உனக்கு முக்கியம்..??”

“ப்ளீஸ் கண்ணம்மா.. அப்டிலாம் சொல்லாத.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்..!! இன்னைக்கு நான் செம மூடுல இருக்கேன்.. வந்ததும் எனக்கு சூடா ஒன்னு வேணும்..!! ஓகேவா..??”

“சூடாதான..?? வா.. கரண்டியை காய வச்சு.. சூடா ஒன்னு போடுறேன்.. வாயிலேயே..!!”

“ம்ஹூம்.. நான் கேட்டது முத்தம்..!!”

“உன் முகறைக்கட்டை..!! இங்க பாரு.. முத்தம் வேணும்னா.. ஒன்பது மணிக்குள்ள வீட்டுக்கு ஓடிவா..!! இல்லனா கரண்டில நல்லா சூடுதான் கெடைக்கும்..!!”

“ம்ம்ம்ம்… சரி.. ஒருவேளை நான் ஒன்பது மணிக்குள்ள வந்துட்டா..?”

“முத்தம் கெடைக்கும்..!!”

“எத்தனை..???”

“என்ன கேள்வி இது..? ஒண்ணுதான்..!!”

“அதுலாம் பத்தாது எனக்கு..!!”

“ஓ.. அப்போ எத்தனை வேணுமாம்.. ஐயாத்தொரைக்கு..?”

“பத்து..!!”

“ஓஹோ.. ரொம்பதான் ஆசை..”

“ப்ச்.. தரமுடியும்னா சொல்லு.. நான் வர்றேன்..”

“ம்ம்ம்ம்.. சரி.. ஒன்பது மணிக்குள்ள வந்துட்டா.. பத்து முத்தம்..!!”

“லிப்ஸ்ல..?”

“லிப்ஸ்லதான்டா சொல்றேன்.. வா..!!”

“சரி.. ஒருவேளை எட்டு மணிக்குள்ளயே வந்துட்டன்னா..?”

“எட்டு மணிக்குள்ள வந்துட்டேனா.. ம்ம்ம்ம்… டபுள்..!! ட்வெண்ட்டி..!!”

Screw Driver

காதல் கொஞ்சம்.. காமம் கொஞ்சம்..

You may also like...

1 Response

  1. March 19, 2020

    […] விட்டுக்கொண்டேன்.பின் அன்வர் என் மார்பை பிடித்து சப்பாத்தி மாவு போல […]

Leave a Reply