தீக்குள் ஒரு தவம் – அத்தியாயம் – 11

324
அன்று காலை எழுந்து காரை எடுத்துக் கொண்டு அருவிக்கு சென்று குளித்துவிட்டு வந்த மான்சி…. உணவுக்குப் பிறகு கம்பெனிகளுக்கு விசிட் வந்தாள்…..

மூன்றாவதாக சிறிய கம்பெனிக்கு வந்தவளுக்கு அன்று சத்யன் தன்னிடம் மரியாதை குறைவாகப் பேசி தகராறு செய்தது தான் ஞாபகத்துக்கு வந்தது…. அன்றைய ஆத்திரம் துளியும் குறையாமல் “என்கிட்ட ஒருநாள் மாட்டுவடா…. அன்னைக்குப் பாரு நல்லுவோட மகள் எப்படிப்பட்டவன்னு” என்று கடுமையான குரலில் கூறிக்கொண்டாள்….

மீண்டும் வீட்டுக்கு வர மணி ஆறானது…. தொழில் சம்மந்தமாக அப்பாவிடம் சில விஷயங்களைப் பேசிவிட்டு அக்காவின் அறைக்கு வந்தாள்….

இன்னும் அழுதுகொண்டு கிடந்தவளைக் கண்டு எரிச்சல் மூண்டது….. அருகே சென்று “ஏய் ஜான்சி,, அழுகையை நிறுத்திட்டு எழுந்திரி” என்று அதட்டினாள்…

ஆனால் அவள் அதட்டலைக் கேட்டு நடக்கத்தான் ஜான்சியால் முடியவில்லை…. காதடைத்துப் போய்க் கிடந்தாள்….

மகளின் நிலைக்கண்டு கவலையுடன் அமர்ந்திருந்த கஸ்தூரிக்கு மான்சியின் அதட்டல் கேட்டு கோபம் வந்தது…. வேகமாக எழுந்து வந்தவள் “நிறுத்துடி…. நானும் பார்க்கிறேன் ரொம்ப ஓவராத்தான் பேசுற….. அதான் நீ நினைச்சதை சாதிச்சிட்டியே… இன்னும் என்னயிருக்கு? புருஷனைப் பறிகொடுத்தவ அழாம என்ன செய்வா? நீ போய் உன் வேலையைப் பாரு…. அவளைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்” என்று கடுமையாகக் கூறவும்…

சற்றே தயங்கிய மான்சி “அம்மா அவ நல்லதுக்குத்தான் சொல்றேன்…. நீயும் புரியாம பேசாதே” என்றாள்…

“அவ நல்லது தானே? அது எனக்கும் தெரியும்… என் மகளுக்கு எது தேவைனு முடிவு பண்ண எனக்குத் தெரியும்… நீ தலையிடாதே” என்றாள் கஸ்தூரி…

ஏதோ சொல்ல வந்து வேண்டாம் என்ற முடிவுடன் அங்கிருந்து வெளியேறி தனது அறைக்குச் சென்றாள்…. சென்னை கிளம்ப தேவையானவற்றை எடுத்துக் கொண்டு கீழே வந்தாள்…


மகளை கண்டதும் எழுந்து வந்த நல்லுவிடம் “ரெண்டு பேரையும் கவனமா பார்த்துக்கங்க டாடி… ரொம்பவே கவனமா…..” என்று எச்சரித்தாள்…..

“சரி பாப்பா ” என்றவர்… “டின்னர்ரெடியா இருக்கும்மா” என்றார்…

“இல்ல டாடி நைட் டிரைவிங்…… டின்னர் முடிச்சிட்டுப் போனா தூக்கம் வர வாய்ப்பிருக்கு… வெறும் ஜூஸ்… ஆப்பிள் ஜூஸ் மட்டும் கொண்டு வரச் சொல்லுங்க” என்றபடி சோபாவில் அமர்ந்தாள்…

மகளின் அருகே வந்த நல்லு “பாப்பா,, கொஞ்சம் என் ரூமுக்கு வாம்மா” என்று அழைத்து விட்டு முன்னால் நடக்க… என்னவாயிருக்கும் என்றக் குழப்பத்தோடு எழுந்து சென்றாள் மான்சி…

அறைக்குள் சென்று தனது லாக்கரைத் திறந்தவர் அதிலிருந்து ஒரு பாக்ஸை எடுத்து வந்தார்…. மகளிடம் அதை நீட்டியபடி “இதுக்கு லைசன்ஸ் இருக்கு பாப்பா…. உன் பாதுகாப்புக்கு வச்சிக்கோ… ப்ளாக்ல ஒன்னு வாங்கி வச்சிருக்கேன்… அது என்கிட்ட இருக்கட்டும்” என்றார்…


புருவங்கள் முடிச்சிட அந்த பாக்ஸை வாங்கித் திறந்துப் பார்த்தாள்…. உள்ளே சிவப்பு நிற வெல்வெட் துணியின் பின்னணியில் கருப்பு நிற பிஸ்டல் பளபளத்தது… அதனை சுற்றிலும் வரிசையாக பன்னிரண்டு தோட்டாக்களும் இருந்தன….. சிறு சிரிப்புடன் நிமிர்ந்து தகப்பனைப் பார்த்து “என்ன டாடி பயப்படுறீங்களா?” என்று கேட்க….

“பயம் இல்லைம்மா… இது பாதுகாப்பிற்காக…. உன் தைரியம் எனக்குத் தெரியும்…. இருந்தாலும் வச்சிக்கோ பாப்பா” என்றார்…..

சற்று சப்தமாக சிரித்தவள் “ஓகே டாடி,, வச்சுக்கிட்டாப் போச்சு…. எவனாச்சும் எடக்கு மடக்கா பேசினா டபக்குனு சுட்டுத் தள்ளிட வேண்டியது தான்…… ஆனா நீங்க எனக்கு அடிக்கடி ஜாமீன் எடுக்க வேண்டியிருக்கும் டாடி…” என்று கண்சிமிட்டி கூறிவிட்டு தகப்பனின் தோளில் சாய்ந்தாள்…

தோளில் கிடந்தவளின் நெற்றியில் முத்தமிட்டு “உன்னை மாதிரியே உன் அக்காவும் இருந்திருந்தா எவ்வளவு நிம்மதி பாப்பா” என்றார் வேதனைக் குரலில்….

“மாறுவாள் டாடி…. கூடிய சீக்கிரம் மாறிடுவா…. வருத்தப்படாதீங்க” என்று கூறிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்தாள்….

பச்சைநிற புடவையை யூணிபார்மாக அணிந்த பெண் கையில் ஜூஸ் டம்ளரோடு வர….. ஜூஸை வாங்கிய மான்சி “என்ன பாண்டியம்மா…. உன்னால தான் வேலைக்காரங்க எல்லாருக்கும் யூணிபார்ம் கிடைச்சது…” என்று கேலியாக கூறினாள்…

அன்று புதுப்புடவைக் கட்டியதால் மான்சியிடம் அவமானப்பட்டதை நினைத்துக் கொண்ட பாண்டியம்மாள் எதுவும் பேசாமல் தலைகுனிந்தபடி நின்றிருந்தாள்…. ஜூஸ் மொத்தமும் குடித்து விட்டு கொடுத்த டம்ளரை வாங்கிக் கொண்டு சமையலறைக்குச் சென்றவள் ரவிக்கைக்குள்ளிருந்து தனது மொபைலை எடுத்து சத்யனின் நம்பருக்கு கால் செய்து தங்கை தேன்மொழி கூறியது போல் இரண்டு ரிங் மட்டும் கொடுத்து கட்செய்தாள்…..

பிஸ்டல் இருந்த பாக்ஸை தனது பேக்கினுள் அடியில் வைத்து மேலே துணிகளை வைத்துக் கொண்ட மான்சி “ஓகே டாடி… நான் கிளம்புறேன்… டேக் கேர்” என்றபடி கார் சாவியுடன் செல்ல…. வேலைக்காரன் எடுக்க வந்த மான்சியின் பேக்கை தானே எடுத்துக் கொண்டு மகளை வழியனுப்பச் சென்றார் நல்லு..

கேட் வரை வந்து கார் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்திருந்த பிறகு தான் வீட்டுக்குள் வந்தார்….


சிவகாசியைத் தாண்டி விருதுநகர் செல்லும் சாலையில் வடமலைபுரம் கடந்ததும் மான்சியின் கைகளில் கார் தடுமாறியது…. முதலில் அலட்சியமாக இருந்தவள்…. அடிக்கடி விழிகளை சொருகிக் கொண்டு வரவும் தலையை உலுக்கிக் கொண்டாள்….

சில நிமிடங்களில் சாலையில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு தலை துவள ஆரம்பிக்கவும் தான் ஏதோ விபரீதம் என்று புரிந்தது…. என்னவென்று யோசிக்கும் போது பாண்டியம்மாள் கொடுத்த ஜூஸின் வித்தியாசமான சுவை இப்போது மூளையில் உரைத்தது… “சதி பண்ணிட்டியேடி நாயே” என்று முனங்கியவளின் கண்கள் முற்றிலும் சொருகிக்கொள்ள காரை சாலையோரம் நிறுத்தினாள்…

அவள் நிறுத்திய மறு நிமிடம் யாரோ காரின் ஜன்னலை தட்டவும்…. தட்டுத்தடுமாறி லாக்கை விடுவித்ததும் இரு பக்கமும் ஒரே நேரத்தில் கதவுத் திறக்கப்பட்டது

காரின் இடது பக்கக் கதவைத் திறந்த வேலு இவளை இந்தப் பக்கத்து சீட்டுக்கு இழுத்த மறுநொடி வலது பக்கமாக சத்யன் ஏறி டிரைவர் சீட்டில் அமர்ந்தான்….

“யார்டா நீங்க” என்ற மான்சியின் கத்தல் அவளுக்கே கேட்கவில்லை…. முற்றிலும் தலை துவண்டு போக சீட்டில் சரிந்தாள்…..

வேலு கார் கதவை அறைந்து மூடியதும் உடனே சீறிக்கொண்டு கிளம்பியது…. அடுத்து வந்த சர்வீஸ் ரோட்டில் இறங்கி சிறிது தூரம் சென்றதும் அதிலிருந்து பிரிந்த மண் சாலையில் விரைந்தது கார்…

பின்னால் பைக்கில் வேலு வர… அவனுக்குப் பின்னால் சங்கரும் தேன்மொழியும் இன்னொரு பைக்கில் வந்தனர்….

மண் சாலையை கடந்து வழியே இல்லாத வனப்பகுதிக்கு வந்ததும் காரை நிறுத்திவிட்டு இறங்கினான்……. மறுபக்கம் வந்து கதவைத் திறந்து மான்சியைத் தூக்கி பின் சீட்டில் போட்டான்

பின்னால் வந்த பைக்குகள் நின்றதும்… மூவரும் கார் அருகே வந்தனர்… தேன்மொழி ஒரு பையை சத்யனிடம் கொடுக்க…. பையைப் பிரித்து உள்ளிருந்ததை எடுத்து வேலு அடித்த டார்ச் வெளிச்சத்தில் பார்த்தான்… இரண்டு புது நைட்டிகள் இருந்தன….

ஒன்றை எடுத்து தேன்மொழியிடம் கொடுத்து “அவ உடம்புல இந்த நைட்டியைத் தவிர வேற எதுவும் இருக்கக் கூடாது…. எல்லாத்தையும் எடுத்து இந்த கவர்ல போடு” என்று மெல்லியக் குரலில் கூறிவிட்டு ஒரு பாலித்தீன் கவரைக் கொடுத்தான்…..

சரியென்று தலையசைத்துவிட்டு காருக்குச் சென்றாள்….

சங்கர் கொடுத்த ப்ளாஸ்கில் இருந்து பாலை ஒரு கப்பில் ஊற்றிவிட்டு வேலு கொடுத்த மிச்ச மாத்திரைத் தூளை அதில் கொட்டி கலக்கினான்….

மான்சியின் உடைகளை மாற்றிவிட்டு வந்த தேன்மொழி… “சத்யா இதை என்ன செய்றது?” என்று மான்சியின் வைர நகைகளைக் காட்டிக் கேட்டாள்…

“எல்லாத்தையும் அந்தத் துணிப் பைலயேப் போடு தேனு” என்றவன் “அதிலருந்து அவ உள்ள போட்டிருந்த டிரைஸை எடுத்துத் தனியா இந்த கவர்ல போடு தேனு” என்று மற்றொரு சிறிய கவரைக் கொடுக்க… வாங்கி உடனே பிரித்து எடுத்து தனித்தனியாகப் போட்டாள்….

அதை வாங்கி வேலுவின் கையில் கொடுத்து “நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் வேலு… பெரிய கவர் மொதல்ல அனுப்பனும்…. அடுத்ததை நான் சொன்னப் பிறகு அனுப்பு” என்றான்….

கவரை வாங்கிய வேலு தேன்மொழியிடம் கொடுத்து “பத்திரமா வை தேனு… வீட்டுக்கு வந்து வாங்கிக்கிறேன்” என்றான்


மான்சியிடம் வந்த சத்யன்… அவள் தலைமுடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்தி டம்ளரை வாயில் வைத்து…. “குடிடி” என்று அதட்டவும்… நீண்ட தூக்கத்தில் சிக்கிக்கிடந்த மான்சி வாயைக்கூட திறக்கவில்லை….

“வேலு,, இங்க வந்து இவ மூக்கைப் பிடி” என்றதும் வேலு ஓடிவந்து மான்சியின் மூக்கைப் பிடிக்க… சுவாசத்திற்காக வாயைத் திறந்தவளின் வாய்க்குள் தூக்க மாத்திரை கலந்த பாலை கடகடவென ஊற்றினான்…

மான்சி மொத்ததையும் குடித்து முடிக்கவும்… அப்படியே தள்ளிவிட்டு வந்தவன்…. “நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க… சொன்னது கவனமிருக்கட்டும்” என்று கூறி சங்கரையும் தேன்மொழியையும் அனுப்பி வைத்தான்….

“ரொம்ப மோசமான சிறுக்கி இவ கவனம் சத்யா” என்ற எச்சரிக்கையுடன் தேன்மொழி தனது கணவனுடன் கிளம்பிச் சென்றாள்…

சத்யன் வேலுவை கையசைத்துவிட்டு காரில் ஏறி ஸ்டார்ட் செய்து கிளம்ப… வேலு பைக்கில் அவனைத் தொடர்ந்தான்….

கடுமையான மலைப் பாதையில் கார் மெல்ல மெல்ல ஏறியது…… முடிந்தவரை காரை செலுத்தியவன் இனி கார் நகராது என்ற நிலையில் நிறுத்தினான்….

பின்னால் வந்த வேலுவும் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கி வர… இருவரும் சேர்ந்து மான்சியை இறக்கி தரையில் படுக்க வைத்துவிட்டு காரின் அருகே வந்தனர்…

மலையின் சரிவில் டார்ச் அடித்துப் பார்த்த வேலு “சரியான இடம்தான் மாப்ள… காரை எவனாலயும் கண்டுபிடிக்க முடியாது” என்றான்….

“சரி வா” என்று காரின் அருகே சென்றவன் உள்ளேயிருந்த மான்சியின் பையை எடுத்து அவளருகே வீசிவிட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை இஞ்ச் இஞ்சாக நகர்த்தி பள்ளத்தில் தொங்குவது போல் நிறுத்திவிட்டு ஜாக்கிரதையாக இறங்கினான்….

பிறகு இருவரும் சேர்ந்து காரை முழுத் திறன் கொண்டு தள்ள… கார் மெதுவாக நகர்ந்தது…. சற்று நேரத்தில் கார் முழுவதுமாக சரிவில் உருள ஆரம்பிக்க… தள்ளவதை விட்டுவிட்டு இருவரும் விலகினர்…. சில நிமிடங்களில் பள்ளத்தில் விழுந்து நெருங்கியது கார்….

ஓடிவந்து மான்சியை தூக்கிய சத்யன் “என்னத்த தின்னுவான்னு தெரியலை… எருமை மாடு மாதிரி கனக்குறா” என்றவன் “ம்ம் சீக்கிரம் வேலு” என்றதும் மான்சியின் பையை எடுத்து பெட்ரோல் டாங்க் மீது வைத்துக் கொண்டு வேலு பைக்கை ஸ்டார்ட் செய்ய… நடுவே மான்சியை உட்கார வைத்து பின்னால் சத்யன் அமர்ந்தான்…

அடுத்ததாக பைக் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அதுவரை வந்தனர்

“இனி வண்டி போகாது… நிறுத்து வேலு” என்றான்….

மீண்டும் மான்சியை இறக்கியவன் அவளின் பையை பின்புறமாக மாட்டிக் கொண்டு… அவளைத் தூக்கித் தோள்மீது போட்டுக் கொண்டான்… “நீ கிளம்பு வேலு… சொன்னதை மறக்காதே” என்றான்….

கையிலிருந்த டார்ச்சை சத்யனிடம் கொடுத்துவிட்டு “ஜாக்கிரதை மாப்ள” என்ற எச்சரிக்கையுடன் வேலு பைக்கில் புறப்பட்டுச் செல்ல…. தோளில் சுமந்த உயிர் சுமையுடன் டார்ச் ஒளியில் மலைக் குகை நோக்கி நடந்தான்….
நெடுநேர நடை… தோளில் இருந்தவள் அதிகமாக கனக்க ஆரம்பித்தாள்…. ஒரு இடத்தில் தரையில் இறக்கிப் போட்டுவிட்டு சற்று இளைப்பாறியவன் மான்சியின் முகத்தில் டார்ச் அடித்துப் பார்த்தான்….

கூந்தல் சிதறிக்கிடக்க சுயநினைவின்றி உறங்கினாள்….. “ஏய் கொலைகாரி…. பழிவாங்கப் போறேன்டி உன் பரம்பரையை….” என்று கர்ஜித்தவன் அவள் முகத்தருகே வந்து உற்று நோக்கி “உன்னை இப்படியேக் கொன்னுடட்டுமா?” என்று கேட்டவன்… அதற்கான பதிலையும் அவனே சொன்னான் “ஆனா அப்புறம் என் அம்மா? என் குணா? இவங்களோட உன் அக்காவையும் நான் தானே பாதுகாக்கனும்?” என்றான் கரகரத்த குரலில்……

பிறகு மீண்டும் அவளைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு குகை நோக்கி நடந்தான்…. அன்று போலவே மிருகங்களின் குரலும்… அலறலும் கேட்டாலும் அவனைப் பயப்படுத்தவில்லை.. வீறு நடையாக நடந்தான்…

குகை வந்துவிட்டது…. தோளில் கிடந்தவளை தொப்பென்று கீழே போட்டு இரு கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு குகைக்குள் கிடத்தினான்….

நிமிர்ந்து நின்று இடுப்பில் கைவைத்து பயங்கரமான ரௌத்திரம் நிறைந்த பார்வையுடன் மான்சியைப் பார்த்தான்……. “இனி நீ வாழ்றதும் சாவுறதும் என் கைல தாண்டி சாத்தானே” என்று சத்தமாக கர்ஜித்தான் சத்யன்” தென்றலுக்குத் தலையசைக்கும் நானலும் நான்..

” தேகத்தைப் பொசுக்கும் தீப்பிழம்பும் நான்….

” கரையைத் தொட்டோடும் தண்ணீரும் நான்…

” கண்கள் சுரக்கும் கண்ணீரும் நான்…..

” மலையிலிருந்து கொட்டும் அருவியும் நான்…

” மலர் தாவும் வண்டும் நான்…

” மண் வாசனை தரும் மழைத் துளியும் நான்….

” மழலையின் சிரிப்பும் நான்….

” சுறு சுறுவென சுற்றித் வரும் தேனீயும் நான்…

” சுருண்டு கிடக்கும் நாகமும் நான்….

” துள்ளித் திரியும் மான் கூட்டமும் நான்….

” தூண்டிலில் சிக்கும் மீனும் நான்….

” சோம்பலின்றி புலரும் சூரியனும் நான்…

” தூக்கமில்லா இரவுகளும் நான்….

” கன்னிப் பெண்ணின் கால் கொலுசும் நான்….

” கவிதை கூறும் தமிழும் நான்…

” அதிகார ஆணின் அடங்காத கர்வமும் நான்…

” அழகுப் பெண்ணின் திமிரும் நான்….

” ஆத்திரத்தால் ஏற்படும் அழிவும் நான்….

” அன்பு செய்யும் தாயும் நான்……

” அகிலத்தில் அசையும் அத்தனையும் நான்…

” அசையாத ஆண்டவனும் நானே நான்!!!Soppana Sundari
  • Soppana Sundari
  • முகம் தெரியாத தைரியத்தில் என் காம ஆசைகளை வெளிப்படுத்தும் சாதாரண குடும்பப் பெண்.
    திருமணம் ஆனவள்.
    பையன் ஸ்கூல் படிக்கிறான்.

Inline
Inline