கர்ப்பம் அடைவதற்கான மிகச்சிறந்த செக்ஸ் பொசிசன்

best sex positions to conceive a baby

ஒவ்வொரு பெண்ணில் வாழ்விலும் கர்ப்பம் அடைதல் என்பது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. அது அந்த பெண்ணிற்கு மட்டுமல்லாது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பேரின்பத்தை அளிக்க கூடிய ஒன்றாக இருக்கின்றது.

ஒரு பெண்ணின் வயது அவள் கர்ப்பம் அடைவதற்கு முக்கியகாரணமாக இருக்கின்றது. ஆகவே, கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயதை கண்டறிவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு பெண்ணின் வாழ்வில் கர்ப்பம் அடைதல் என்பது மிகவும் முக்கியத்தும் வாய்ந்த ஒன்றாகும்.

கர்ப்பம் அடைவதற்கு முன்னதாகவே சரியாக திட்டமிடுவது ஆரோக்கியமான கர்ப்பத்தை அடைய உதவும். உங்கள் கர்ப்பகாலத்தை சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வைப்பதற்கு பல வழிகள் உள்ளன.

கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது உங்களுக்கு அமைதியான கர்ப்பகாலத்தையும் ஆரோக்கியமான குழந்தையையும் அளிப்பதற்கு தேவையான முக்கியமான ஒன்றாகும். கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயதை அறிந்து வைத்து கொள்ளுவது உங்களுக்கு மனரீதியான மற்றும் உடல்ரீதியான பலன்களை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

இது உங்களை ஆரோக்கியமாக வைப்பதோடு மட்டுமல்லாது உங்கள் குழந்தையின் சரியான மூளைவளர்ச்சிக்கும் மற்றும் உடல்வளர்ச்சிக்கும் உதவி புரியும். பாதுகாப்பான வயது என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வேறுபட்டே இருக்கும். பொதுவாக 30 வயதிற்குமுன் கர்ப்பம் அடைவது சிறந்த வயதாகும். 30 வயதிற்கு பிறகும் கர்ப்பம் அடையலாம்.

ஆனால், அது குழந்தைக்கும் தாய்க்கும் பல பிரச்சனைகளையும் ஆபத்துகளையும் அதிகரிக்க செய்யும். உங்கள் வயது 30க்குள் இருந்தால் அந்த குழந்தையை பராமரிக்க தேவையான அதிக சக்தியும் வலிமையும் இருக்கும். 35 வயதிற்கு பின் உங்களின் கருவளம் குறையத்தொடங்கிவிடும் இதனால் கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடக்கூடும். எந்த வயதில் கர்ப்பம் அடைந்தாலும் அதற்குரிய நன்மைகளும், தீமைகளும் நிச்சயம் இருக்கும்.

நீங்கள் கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயதை கண்டறியும் சூழ்நிலையில் கீழேயுள்ள சிலவற்றை
மருத்துவரீதியான ஆரோக்கியம் கர்ப்பம் அடைவதற்கான வயது என்பது ஒவ்வொரு பெண்ணின் உடல்நிலையை பொறுத்தே இருக்கும். நீங்கள் கர்ப்பம் அடைவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இதன் மூலம் உங்களின் கர்ப்பத்தை பாதிக்கும் ஏதேனும் பிரச்சனையை உள்ளதா என்பதை கண்டறிய உதவும்.உங்கள் கணவரின் ஆரோக்கியம் கர்ப்பம் அடைவதற்கான வயதை கண்டறியும் பொது உங்கள் கணவரின் ஆரோக்கியத்தையும் கண்டறிவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏன்னெனில், ஆரோக்கியமான குழந்தையை பெற நீங்களும் உங்கள் கணவரும் உடல்ரீதியாக ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியத்தும் வாய்ந்த ஒன்றாகும்.